தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, October 15, 2019

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம்

       அக்டோபர் 20 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கைலை கழகத்தின் நிறுவனரும், வேந்தரும்மான டாக்டர் ஏ.சி சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார்.


     புதிய நீதி கட்சி தலைவர் டாக்டர் ஏ.சி சண்முகம் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு  அதிமுக வில் ஒரு மனதாக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப் போவதாக டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
     இதையொட்டி அதிமுக தொண்டர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment