உங்களது பத்திரம் தொலைந்து விட்டதா? இனி கவலை வேண்டாம்! மிக எளிதில் வாங்கலாம்! எப்படி தெரியுமா?? - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, February 9, 2023

உங்களது பத்திரம் தொலைந்து விட்டதா? இனி கவலை வேண்டாம்! மிக எளிதில் வாங்கலாம்! எப்படி தெரியுமா??


தங்களது  சொத்து பத்திரங்கள் தொலைத்து விட்டதா ! பயம்  வேண்டாம்  மாற்று நகல் பத்திரங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையான காண்போம். 

வழிமுறை 1

முதலில் நீங்கள் செய்யவேண்டியது  உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு  சென்று  பத்திரம்  காணாமல்போய்விட்டது என புகார் ஒன்றினை  அளிக்க வேண்டும் . முக்கியமாக அதன்  எப்.ஐ.ஆர் நகலினை  பெற்றுகொள்ளுங்கள் .

வழிமுறை 2

ஒரு வாரம் கழித்து காவல் நிலையத்தில்  உங்களது ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை  என்றால் "non traceable certificate" சான்றிதழினை பெற்றுகொள்ளுங்கள்

வழிமுறை 3

அதன் பிறகு  பத்திரிகை"நியூஸ் பேப்பர்"  ஒன்றில் பத்திரம்  தொலைத்ததை  விளம்பரபடுத்திவிட்டு, நீங்கள் அளித்த விளம்பர  தூண்டு பகுதியை   வெட்டி  வைத்துகொள்ளவும் 

வழிமுறை 4

இறுதியாக "தொலைந்த பத்திரம்  பற்றிய ஆட்சேபம்  ஏதுமில்லை" என்று  "நோட்டரி  பப்ளிக்   வழக்கறிஞர்" இடம்  உறுதிமொழியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வழிமுறை 5

மேலே  குறிப்பிட்ட அனைத்து சான்றிதழினை எடுத்துக்கொண்டு தங்களது  சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல்  வேண்டி விண்ணப்பம் செய்யவேண்டும் 

பிறகு  சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து  தங்களது பத்திரத்தின் நகல்  பிரதினை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment