"கண் கண்ணாடிக்கு ரூ.500 நலத்தொகை பெறும் எளிய வழிமுறை – அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் மூலம்!"|"Tamil Nadu Government Eyeglass Subsidy for Welfare Card Holders – Who is Eligible and How to Apply"|Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, August 12, 2025

"கண் கண்ணாடிக்கு ரூ.500 நலத்தொகை பெறும் எளிய வழிமுறை – அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் மூலம்!"|"Tamil Nadu Government Eyeglass Subsidy for Welfare Card Holders – Who is Eligible and How to Apply"|Tech Info

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் கண் கண்ணாடி உதவி தொகை பெறலாம்.அதாவது நலவாரிய அட்டை வைத்திருப்போர் கண் கண்ணாடி உதவி தொகை விண்ணபிப்பதன் மூலம் தமிழக அரசால் நலவாரியத்தின் கீழ் ரூ 500 வழங்க பட்டு வருகிறது.



                                                     

கண் கண்ணாடி உதவி தொகை விண்ணப்பத்தை கீழே உள்ள லிங்க் ஐ click செய்து download செய்து கொள்ளலாம்.

குறிப்புகள்:

  • தமிழில் எழுத வேண்டும்.
  • அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • நீல நிற பேனாவை பயன்படுத்த வேண்டும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி?

  1. உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர்- நலவாரிய அட்டையில் குறிப்பிட்டுள்ள வாரியத்தின் பெயர்.
  2. பதிவு பெற்ற உறுப்பினரின் பெயர் - நலவாரிய உறுப்பினர் பெயரை எழுதவும்.
  3. தந்தை /கணவர் பெயர் - விண்ணப்பிப்பவர் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் பெண்ணாக இருந்தால் கணவர் பெயரையும் எழுதவும்.
  4. முழு முகவரி- நலவாரிய அட்டையில் உள்ள முகவரியை தவறில்லாமல் எழுத வேண்டும்.
  5. பதிவு எண் / நாள்- நலவாரிய அட்டை பதிவு எண் மற்றும் பதிவு செய்த நாள் குறிப்பிட வேண்டும்.
  6. குடும்ப அட்டை எண் - தற்போது உள்ள  digital ரேஷன் card இல் கீழ் உள்ள  333 என தொடங்கும் எண்ணை போடவேண்டும் அல்லது www.tnpds.gov.in  இந்த லிங்க் ஐ click செய்து download செய்து அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிடவும்.
  7. ஆதார் எண் - நலவாரிய அட்டை உறுப்பினரின் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
  8. தொழிலின் தன்மை-  வாரியத்தின் பெயரில் எந்த பெயரை குறிப்பிட்டமோ அந்த வாரியத்தின் தொடர்பான தொழிலை போடவேண்டும்.(உதாரணத்துக்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்.தச்சு தொழில்..)
  9. மருத்துவரின் பரிந்துரை சீட் நாள் - கண் மருத்துவர் எழுதி கொடுத்த பரிந்துரை சீட்டினுடைய தேதியை குறிப்பிடவும்.
  10. கண் கண்ணாடி வாங்கிய நாள் - கண்ணாடி வாங்கிய நாள்.
  11. பதிவு பெற்ற உறுப்பினரின் கையொப்பம் - கையொப்பம் இட வேண்டும்.
  12. இடம் மற்றும் நாள் - விண்ணப்பம் பதிவு செய்யும் இடம் மற்றும் அன்றைய தேதியை குறிப்பிட வேண்டும்.
  13. தொழிற்சங்கதினுடைய கையெழுத்து மற்றும் முத்திரை(seal)- கண்டிப்பாக தேவை.அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு  சென்று வாங்கி கொள்ளவும்.

DOWNLOAD FORM

  1. தொடர்புக்கு:
  2.       மேலும் தகவல் பற்றி அறிய  அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய  பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர்  விவரங்களை அனுப்பவும்.
  3. இன்னும்  தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும். 
  4. http://bit.ly/40LsYZO



No comments:

Post a Comment