ஆதார் என்பது தனிமனித அடையாள ஆவணமாக திகழ்கிறது . அந்த ஆதாரில் நீங்கள் ஏதேனும் மாற்றம் செய்திருந்தாலோ அல்லது புது ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தலோ அவற்றின் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் ஆன்லைன் மூலமாக உங்கள் மொபைலிலே Check செய்ய இயலும் ! எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
- முதலில் கீழே உள்ள Check Aadhar Status என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது நீங்கள் ஆதார் சேவை மையங்களில் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் உங்களுக்கு ஒரு ரசீது கொடுத்து இருப்பார்கள். அதில் Entrollment நம்பர் இருக்கும். அல்லது நீங்கள் e சேவை மையங்களில் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் SRN Number இருக்கும். அவற்றை முதல் கட்டத்தில் டைப் செய்யவும்.
- பின் கீழே உள்ள Captcha வை சரியாக enter செய்து submite என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் கோரிக்கை விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்க்க இயலும்.
- ஆதார் அலுவலகங்களில் அதிகாரிகளின் சரிபார்ப்பு முடிந்த பின் Your Aadhar Has Been Generated என வந்தால் உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக மாற்றப்பட்டது. நீங்கள் உங்கள் E-ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- மாறாக Your Request Has Been Rejected என வந்தால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment