அரசு வழங்கக்கூடிய அனைத்து விதமான சேவைகளிலும் இடஒதுக்கீடு பெறுவதற்கு சாதி சான்றிதழ் என்பது மிக அவசியமான ஆவணமாகிறது. மேலும் தற்போது பழைய சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ள டிஜிட்டல் சான்றிதழாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மிக எளிமையாகவே பழைய சாதி சான்றிதழை டிஜிட்டல் சாதி சான்றிதழாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக்கொள்ளலாம்! எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- விண்ணப்பதாரரின் பழைய சாதி சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
- விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை
( மேலே கூறப்பட்ட ஆவணங்களை 200 KB க்குள் ஸ்கேன் செய்து வைத்துகொள்க. புகைப்படம் மட்டும் 50 KB க்குள் இருக்க வேண்டும்)
- கீழே உள்ள "Community Certificate Apply" என்ற linkஇல் செல்லவும்.
- ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு / Citizen Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
- Account create செய்த பின் உங்களுடைய Username மற்றும் password டை கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து login செய்து கொள்ளவும்.
- உள் சென்றதும் Service Wise என்ற Option னைக் கிளிக் செய்து அங்குள்ள search boxஇல் Incom என டைப் செய்யவும் .
- இப்போது Incom certificate என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- இங்கு திரையில் தெரியக்கூடிய கட்டங்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்து CAN நம்பரை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக உங்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்து search என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு CAN நம்பர் இருந்தால் கீழே காண்பிக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய பிறந்ததேதி கொடுத்து Get OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை டைப் செய்து Confirm OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- CAN நம்பர் வரவில்லை என்றால் மேலே உள்ள register can என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுகென்று ஒரு can நம்பரை உருவாக்கி கொள்ளவும் .
- இப்போது Confirm OTP கொடுத்த பின் உள் செல்லும் பக்கத்தில் உங்களுடைய CAN நம்பரில் register செய்த விவரங்கள் காண்பிக்கும்.
- கீழே Scroll செய்தால் உங்கள் அப்பா மற்றும் அம்மாவின் Community யை select செய்து கீழே NO என்ற option னைக் கிளிக் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது மேலே கூறப்பட ஆவணங்களை ஒவ்வொன்றாக upload செய்யவும்.
- பின் மேலே கொடுக்கப்பட்ட Self Declaration Form யை டவுன்லோட் செய்து விண்ணப்பதாரரின் கையெழுத்தை Attach செய்து upload பண்ணவும்.
- இப்போது Make payment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ரூபாய் 60 கட்டணம் செலுத்தினால் உங்களுக்கு ஒரு Acknowledgement Number வரும் அதை வைத்து status செக் செய்துகொள்ளலாம்.
Community Certificate Apply
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment