இனி வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் ரொம்ப ஈசி ! | Voter ID Name Correction In Online | Tech info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, November 27, 2023

இனி வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் ரொம்ப ஈசி ! | Voter ID Name Correction In Online | Tech info



வாக்காளர் அட்டை தான் நாம் இந்திய குடிமகன் என்பதற்கு அடைய சான்றாக உள்ளது. அந்த அட்டையில் நம்மை பற்றிய விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அதில் ஏதும் திருத்தம் இருந்தால் அதை online மூலமாகவே சரி செய்து கொள்ளலாம். இப்போது வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் !

தேவையான ஆவணங்கள்:

  • வாக்காளரின் ஆதார் அட்டை.
( 2 MB க்குள் ஸ்கேன் செய்து வைத்துகொள்க)

  • முதலில் கீழே உள்ள "Name Changes " என்ற linkயை கிளிக் செய்து உள் செல்க.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் மேலே உள்ள  Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Username மற்றும் Password கொடுத்து கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள  கட்டத்தில்  சரியாக  டைப் செய்யது Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு  Account இல்லை என்றால் மேலே உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு Account create செய்து பின் Login செய்யவும்.
  • இப்போது திரையில் தெரியும் Form8 என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகக்கூடிய பக்கத்தில் Self  மற்றும் Others Elector என்ற இரண்டு options இருக்கும். (உங்களுடைய வாக்காளர் அட்டை முகவரியை  மாற்ற விரும்பினால் Self என்ற option னையும் மற்றவர்களுக்கு மாற்ற விரும்பினால்  Others Elector என்ற option னையும் select செய்யவும்.) select செய்த பின் உங்களுடைய வோட்டர் ஐடியில் உள்ள EPIC நம்பரை டைப் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது இரண்டாவதாக உள்ள Correction Of Entries in Existing Electoral Roll என்ற option னைக் கிளிக் செய்து Ok என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகும் படிவத்தில் முதலில் உங்களுடைய மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதியை select செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து வாக்காளரின் ஆதார் எண்னைக் கொடுத்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் கட்டங்களில் Name என்ற கட்டத்தை select செய்து உங்களுடைய பெயரை சரியாக ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப் செய்யவும் .
  • பின் ஆதார் அட்டையை select செய்து அருகில் upload செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Place யை டைப் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது கட்டத்தில் உள்ள Captcha வை கீழே சரியாக டைப் செய்து Preview &Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு preview application காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு ஏதேனும் திருத்தம் இருந்தால் கீழே உள்ள Keep Editing என்ற பட்டனைக் கிளிக் செய்து edit செய்து கொள்ளலாம் எல்லாம் சரியாக இருந்தால் கீழே உள்ள Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.  
  • submit செய்ததும் ஒரு Acknowledgement number வரும் அதை note செய்து கொள்ளவும். அல்லது அருகில் Download Acknowledgement  என்ற பட்டனைக் கிளிக் செய்து Acknowledgement  applicationனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  • உங்களுடைய வோட்டர் ஐடியில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?  என  இந்த Acknowledgement  நம்பர் வைத்து Status செக் செய்துகொள்ளலாம்.
  • தேர்தல் அதிகாரிகளால் சரிபார்ப்பு நிறைவடைந்த பின் உங்களுடைய  மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Name Changes

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..



No comments:

Post a Comment