நலவாரிய அட்டை மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் பணம் ஏறவில்லையா? இப்படி பண்ணுங்க! | Nalavariyam Claim Approval Complaint Register | Tech info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, December 1, 2023

நலவாரிய அட்டை மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் பணம் ஏறவில்லையா? இப்படி பண்ணுங்க! | Nalavariyam Claim Approval Complaint Register | Tech info

தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய அட்டை  மூலமாக உங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வரவில்லையா?  நீங்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பின் எப்போது Approval ஆகிறதோ அந்த தேதியிலிருந்து 90 நாட்கள் ஆகியும் உங்களுக்கு உதவித்தொகை வரவில்லை எனில் குறை தீர் படிவம் மூலமாக  மீண்டும் நீங்கள்  உதவித்தொகையைப் பெற முடியும். எவ்வாறு என்பதை பார்க்கலாம் ! 

தேவையான ஆவணங்கள்:

  1. விண்ணப்பம் Approval  ஆகிய நாளிலிருந்து 90 நாட்கள் வரை  உங்களுடைய வங்கி கணக்கு புத்தகத்தின் Statement 
  2. விண்ணப்பம் Approval ஆகிய Screenshot.
  • கீழே உள்ள " மீண்டும் உதவித்தொகை பெற" என்ற link யைக் கிளிக் செய்யவும்.
  •  ஓபன் ஆகும் பேஜ்ல் English  மொழியை தேர்வு செய்யவும்.
  • இப்போது Grievance Type என்ற பகுதியில் Claims என்ற பட்டனை select செய்யவும்.
  •  அடுத்து Board என்ற கட்டத்தைக் கிளிக் செய்தால் உங்களுடைய நலவாரிய அட்டை வகையை தேர்ந்தெடுக்கவும்.
  • பின் Claim Type ல் நீங்கள் எந்த வகையான உதவித்தொகைக்கு விண்ணப்பித்தீர்களோ அந்த Category யை select செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Registration Number/ பதிவு எண்ணை டைப் செய்யவும்.
  • Application Number என்ற இடத்தில் உங்களுடைய விண்ணப்பத்தின் எண்ணை குறிப்பிடவும்.
  • அடுத்து நலவாரிய அட்டை வைத்துள்ள தொழிலாளியின் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்னைக் கொடுக்க வேண்டும்.
  • Office என்ற இடத்தில் உங்களுடைய தொழிலாளர் அலுவலக மாவட்டத்தை தேர்வு செய்யவும்.
  • Subject என்ற கட்டத்தில் உங்களுடைய புகாரை குறிப்பிடவும். 
  • அடுத்து  Upload Document  என்ற பகுதியில் மேலே கூறப்பட்ட ஆவணங்களை ஒரே file ஆக  பதிவேற்றம் செய்து OTP பெற என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP யை enter செய்து Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய Complaint Register ஆகிவிடும். அதற்காக ஒரு நம்பர் வரும் அதையும் உங்களுடைய மொபைல் எண்ணையும் வைத்து உங்களுடைய  புகார் என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். 

மீண்டும் உதவித்தொகை பெற

6 th Claim Form


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment