வருமானச் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ? | Incom Certificate Online Apply | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, November 26, 2023

வருமானச் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ? | Incom Certificate Online Apply | Techinfo

பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு Scholarship விண்ணப்பிப்பதற்கு  வருமானச் சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகிறது . இந்த வருமானச் சான்றிதழ் மூலம் மாணவர்களின் குடும்ப வருமான விவரங்களை அறிய முடியும். இதன் மூலம் தகுதி வாய்த்த மாணவர்களை எளிதாக கண்டறிய இயலும். ஆனால் இந்த வருமானச் சான்றிதழ் நிரந்தரமானதல்ல. ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் விண்ணப்பித்து வருமானச் சான்றிதழைப் பெற வேண்டும். இந்த வருமானச் சான்றிதழ் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அல்ல அரசின் பல்வேறு துறைகளில் வழங்ககூடிய சலுகைகளை பெறுவதற்கு பொது மக்களுக்கும் தேவைப்படக்கூடிய அத்தியாவசிய சான்றிதழ் ஆகிறது. இந்த சான்றிதழை எவ்வாறு ஆன்லைன் வாயிலாக நாமே விண்ணபிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான ஆவணங்கள் :

  1. விண்ணபிப்பவரின் புகைப்படம் 
  2. விண்ணபிப்பவரின் ஆதார் அட்டை 
  3. விண்ணபிப்பவரின் அம்மா அல்லது அப்பாவின் ஆதார் 
  4. ஸ்மார்ட் கார்டு
இப்போது மேற்சொல்லப்பட்ட ஆவணங்களை 200 KBக்குள் PDF ஆக  Scan செய்து வைத்துகொள்ளவும். புகைப்படம் மட்டும் 50 KBக்குள் JPEG Formatல்   Scan செய்து கொள்ளவும்.

  • இப்போது கீழே உள்ள "INCOM APPLY"என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு / Citizen Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
  • Account create செய்த பின் உங்களுடைய Username மற்றும் password டை கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து login செய்து கொள்ளவும்.
  • உள் சென்றதும் Service Wise என்ற Option னைக் கிளிக் செய்து அங்குள்ள search boxஇல் Incom என டைப் செய்யவும் .
  • இப்போது Incom certificate என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
  • இங்கு திரையில் தெரியக்கூடிய கட்டங்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்து CAN நம்பரை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக உங்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்து search என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு CAN நம்பர் இருந்தால் கீழே காண்பிக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய பிறந்ததேதி கொடுத்து Get OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை டைப் செய்து  Confirm OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • CAN நம்பர் வரவில்லை என்றால் மேலே உள்ள register can என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுகென்று ஒரு can நம்பரை உருவாக்கி கொள்ளவும் .
  • இப்போது Confirm OTP கொடுத்த பின் உள் செல்லும் பக்கத்தில் உங்களுடைய CAN நம்பரில்  register செய்த விவரங்கள் காண்பிக்கும்.
  • கீழே Scroll செய்தால் Details Of Family Members  என்ற பகுதியில் Total Member Of Family Members கட்டத்தில் உங்கள் ரேஷன் அட்டையில் எத்தனை நபர்கள் உள்ளனரோ அவர்களின் எண்ணிகையை குறிப்பிட வேண்டும்.
  • இப்போது நீங்கள் குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழில் ) , அவர்களின் வயது ,பாலினம் , அவர்கள் உங்களுக்கு என்ன  உறவு , அவர்களின் தொழில் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • தொழிலை தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் மாணவர் என்றால் Student என்ற option னையும் வீட்டில் இருப்பவர்கள் என்றால் Household/Depended என்ற option னையும் தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்பதாரரின் விவரங்களை உள்ளிடும் போது Relationship இல் Self என்ற option னை தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து கீழே உள்ள Source Of Incom இல் Salary யைக் கிளிக் செய்து மேலே பூர்த்தி செய்யப்பட்ட நபரின் மாத வருமானத்தை உள்ளிடவும் .
  • இவ்வாறாக ஒவ்வொரு நபரின் விவரங்களை பூர்த்தி செய்து கீழே உள்ள Add என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • எல்லாரையும் Add செய்த பின் கீழே உள்ள Submit  என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது நீங்கள் Document Upload பகுதிக்குச் செல்வீர்கள்.
  • நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்திருக்கும் Documentsயை ஒவ்வொன்றாக upload செய்ய வேண்டும்.
  • அதில் மேலே கொடுக்கப்பட்ட  Self Declaration Form யை டவுன்லோட் செய்து விண்ணப்பதாரரின் கையெழுத்தை Attach செய்து upload பண்ணவும். 
  • இப்போது Make payment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ரூபாய் 60 கட்டணம் செலுத்தினால் உங்களுக்கு ஒரு Acknowledgement Number வரும் அதை வைத்து status செக் செய்துகொள்ளலாம். 

INCOM APPLY

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


1 comment: