உங்க மொபைல் Hack ஆகாம இருக்க கண்டிப்பா இத பண்ணுங்க! | Mobile Safe & Secure Checking | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, December 7, 2023

உங்க மொபைல் Hack ஆகாம இருக்க கண்டிப்பா இத பண்ணுங்க! | Mobile Safe & Secure Checking | Techinfo

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசிய சாதனமாகிறது.இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் மூலமாக பல ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது . சமூக வலை தளங்களில் பகிரப்படும்  link-குகளை கிளிக் செய்வதன் மூலம் தேவையற்ற வேறொரு பக்கத்திற்கு Redirect செய்யப்பட்டு நம்முடைய மொபைல் தரவுகள் Hack செய்யபடுகிறது. இத்தகைய பிரச்சனைகளிலிருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாம் கிளிக் செய்யும் link பாதுகாப்பானதா என மொபைல் மூலமாகவே ஒரு முறை சரி பார்த்துகொள்வதன் மூலம் இவ்வாறான மோசடிகளில் இருந்து தப்பலாம். இந்த பதிவில் அவ்வாறு சமூக வலை தளங்களில் பகிரப்படும் link பாதுகாப்பானதா? என இரண்டு வழிகளில் check செய்யலாம் ! எவ்வாறு  என பார்க்கலாம்..

வழி 1 -

  •  கீழே உள்ள Check Link என்ற link யைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் நீங்கள் எந்த link யை check செய்ய வேண்டுமோ அந்த link யை திரையில் தெரியக்கூடிய கட்டத்தில் Paste செய்யவும்.
  • இப்போது கீழே அந்த link Redirect ஆகும் ஒரிஜினல் website link காண்பிக்கும்.
வழி 2 -
  • உங்களுடைய மொபைலில் Chrome Browser  ஓபன் செய்து கொள்க.
  • Browser Address Bar ல்  நீங்கள் எந்த link யை check செய்ய வேண்டுமோ அந்த link யை Paste செய்து + Icon னை டைப் செய்து  search செய்யவும்.
  • இப்போது கீழே அந்த link Redirect ஆகும் ஒரிஜினல் website link காண்பிக்கும்.

Check Link

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment