சமூக வலைதளங்களில் நடக்கும் புகைப்பட மார்பிங் மோசடி ! அரசு எடுத்த அதிரடி முடிவு ! | How to Stop Non-Consensual Intimate Image Abuse | Social media Scam & NCII Stop | Tech info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, December 3, 2023

சமூக வலைதளங்களில் நடக்கும் புகைப்பட மார்பிங் மோசடி ! அரசு எடுத்த அதிரடி முடிவு ! | How to Stop Non-Consensual Intimate Image Abuse | Social media Scam & NCII Stop | Tech info

 

இன்றைய கால கட்டத்தில் உலகில்  தொழில்நுட்ப துறைய அதீத வளர்ச்சியைக் கண்டுவருகிறது என்பது பெருமைகொள்ளத்தக்க விடயமாக இருந்தாலும் அதன் அதீத வளர்ச்சியினால் சில அபாயங்கள் இருப்பதும் வருத்தம் அளிக்கக்கூடியதே! தொழில் நுட்பத்தை தவறான பாதையில் பயன்படுத்தி மக்களிடம் மோசடிகளை ஏற்படுத்தும் கும்பல்கள்  பல்கி பெருகி வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் தன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை புகைபடங்களாக பதிவேற்றம் செய்கின்றனர் . அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் தவறான நோக்கில் பயன்படுத்தும் கயவர்களிடம் சிக்கினால் அவற்றை புகைப்படம் மார்பிங் செய்து அவர்களுடைய Whatsapp எண்ணிற்கே அனுப்பி பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இந்த மோசடியை தடுக்கும் விதமாக அரசு NCII Stop என்ற வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வலைதளத்தில்  இவ்வாறு மோசடிகளில் சிக்கி தவிப்பவர்கள்  புகார் அளித்தால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் எங்கெல்லாம் பகிரபட்டதோ அந்த இடங்களிலெல்லாம் Delete ஆகிவிடும். அதில் எவ்வாறு புகாரளிக்கலாம் என்பதை பார்க்கலாம்! 

  • கீழே உள்ள "Complaint" என்ற linkயை கிளிக் செய்து உள் செல்லவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் Create Case  என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய வயது, யாருடைய புகைப்படம் மோசடிக்கு உட்பட்டது போன்ற விவரங்களை நிரப்பி Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து மோசடிக்கு உட்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்து Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது உங்களுடைய புகார் Register செய்யப்பட்டுவிட்டது. அதற்காக ஒரு Case Number வரும்.
  • இந்த Case Number வைத்து நீங்கள் அளித்த புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை செக் செய்து கொள்ளலாம். 
  • அதற்கு கீழே உள்ள 'Check Status" என்ற linkயைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய Case Number மற்றும் PIN னை டைப் செய்து Search Case  என்ற பட்டனைக் கிளிக் செய்தால் நீங்கள் அளித்த புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்த்துகொள்ளலாம்.

Complaint

Check Status

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..



No comments:

Post a Comment