சொல்லுக்கும், ஆன்மீகத்திற்கும் தொடர்பு உடையது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, August 27, 2018

சொல்லுக்கும், ஆன்மீகத்திற்கும் தொடர்பு உடையது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

வணக்கம்  நண்பர்களே இன்னைக்கு  நம்ம பேஜ் ல ஆன்மீக  தகவல் ஒன்று  பாக்கபோறோம்!

அது  என்ன   அப்டினா நாம்  பேசுகின்ற  சொல்லுக்கு,ஆன்மீகத்தில் உள்ள  பங்கு.அது  என்ன என்பதை  பற்றி பாக்கபோறோம்.

         நண்பர்களே  நாம் தினமும் பேசுகின்ற வார்த்தைகள்,அத்தனைக்கும் ஒரு வலிமை  உண்டு.அவ்வலிமைகள்  நாம் பேசுகின்ற  வார்த்தையை பொறுத்தே உள்ளது.

ஒரு சமயம்  ஞானி  ஒருவர்  மேடையில் சொல்லிற்கும், வலிமை   உள்ளது என்பதை பற்றி  சிறப்புரை  ஆற்றிகொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த ஞானி சொல்கிறார்  நாம்  பேசுகின்ற வார்த்தைகளுக்கு  வலிமை  உள்ளது. அதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும் .மறுக்க கூடாது என்கிறார்.அதை கேட்ட கூட்டத்தில்  இருந்த  ஒருவர்  அது எப்படி  ஏற்றுகொள்ள  முடியும். அபோ யாராவது  வந்து  நான் கடவுள் என்று சொல்லுவான் இதை நீ நம்பித்தான்  ஆக வேண்டும்  எனவும் சொல்லுவான்  அதையும் நாங்கள்  நம்பித்தான்  ஆகவேண்டுமா. என்ன  ஏமாற்றுகிறீர்களா  என்று  அந்த  ஞானி யை எதிர்த்து  கேள்விகேக்கிறன்  அதற்கு அந்த ஞானி  உனக்கெல்லாம் என்ன தெரியும் நீயோ  சின்னஞ்சிறு  பாலகன்   என்னிடம்   எதிர்த்து  பேசுகிறாயா என்று கோவத்துடன்  சொல்கிறார்.
அதை  கேட்ட  அந்த  மனிதன்  என்னையவா  சின்னபையன் என்கிறாய் என்று கோவம் கொண்டு  அந்த ஞானியை அடிபதற்கு மேடையை நோக்கி செல்கிறான். அப்பொழுது  அந்தஞானி  மேடைக்கு  வந்த  மனிதனை பார்த்து நான்  உன்னை  சொல்லவில்லையப்பா  மன்னித்துவிடு  என்னை ஒன்றும் செய்துவிடாதே  என்று  அவனிடம் பணிந்து  சொல்கிறார். உடனே அந்த மனிதன்  போய்  விடுகிறான். இப்பொழுது  அந்த  ஞானி  சொல்கிறார் பார்த்தீர்களா நான் அவன் என்னிடம்  எதிர்த்து பேசியதற்கு திட்டினேன் உடனே  என்னை அடிப்பதற்கு  ஓடிவந்தான்.அவன் வந்த பிறகு நான் உன்னை சொல்லவில்லை மன்னித்துவிடு  என்று  பணிந்துபேசினேன்  உடனே போய்விட்டான். இதில் இருந்து என்ன  தெரிகிறது  நாம்  பேசுகின்ற சொல் ஒருவனை கோவபட வைக்கிற அளவுக்கு  வலிமை உள்ளதாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் அவனை சாந்த படுத்தும் வலிமையும் அந்த சொல்லிற்கு உள்ளது.


       இவ்வாறு அந்த ஞானி சொல்லிற்கு உண்டான வலிமையை சொல்லி அவர் உரையை முடித்தார்.

    ஆகவே நண்பர்களே  நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு வலிமை உண்டு.ஆகையால்நாம் சொல்லக்கூடிய சொல்லானது இன்னொருவரின் நன்மைக்கு மட்டுமே ஆகட்டும்.தீமைக்கு  பயன்படுத்தி இன்னொருவரை கவலையடைய செய்து விடாதிர்கள்.





                                                                       
 இன்னைக்கு  நம்ம பேஜ் ல  பார்த்த  தகவல்  பயனுள்ளதாக  இருக்கும்  என நம்புகிறேன் .மேலும் ஓரு  நல்ல தகவலில்  சந்திப்போம் .

                                                                          நன்றி!  



         

No comments:

Post a Comment