காலை உணவை தவிர்பவர்களுக்கு காத்திருக்கும் பாதிப்புகள்:
வணக்கம் நண்பர்களே!
இன்னைக்கு நம்ம பேஜ் ல பாக்க போற தகவல் என்னன்னா காலை உணவை தவிர்ப்பதால் நம் உடம்புக்கு ஏற்படும் விளைவுகளை பற்றி பாக்கபோறோம்.வாங்க பாக்லாம்
நண்பர்களே நாம் அனைவரும் வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரும்,உணவும் தான் ஆனால் அதையே நாம் சரியாக உட்கொள்ள தவிர்க்கிறோம்.ஏன் என்பதை பார்ததால் வேலையின் காரணமாக,உடல் எடையை குறைபதற்காக என்கிறார்கள் அல்லது நேரமின்மை என்கிரார்கள்.நம்மளது உடல் அதற்கான சக்தி இருந்தாலே இயங்கும் தன்மையில் இருக்கும்.நம் உடல் இயங்குவதற்கு உணவைதான் எடுத்துகொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உடல் நன்றாக இயங்கும் அதுமட்டும் இன்றி சோர்வின்றியும் வாழ்வதற்கு வழியும் வகுக்கும்.ஆனால் நம்மலோ காலை உணவை அதிகமாக தவிர்க்கிறோம்.அப்படி தவிர்ப்பதால் ஏற்படும் நோய்களை பார்போம்.
சர்க்கரை நோய்:
காலை உணவை தவிர்ப்பதால் குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்ப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.காலையில் சாபிடாமல் இருப்பதால் குளுக்கோஸ் இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும்.பிறகு மதிய உணவு சாப்பிட்ட உடன் அதிக குளுக்கோஸ் இன்சுலின் சுழற்சியில் மாறுபாடு ஏற்படும்.தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொஞ்ச நாட்களில் "இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்" ஏற்பட்டு சர்க்கரை நோயாளியாக மாறிவிடுவோம்.
ஹார்மோன் மாற்றங்கள்:
காலை உணவை தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவு குறையும்.இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள உதவுபவை எரிச்சல் ,நிதானமின்மை போக போக வெளியாக தொடங்கும்.உணவை தவிர்க்கும் போது பசியை தூண்ட கூடிய கரெலின் ஹார்மோன் மற்றும் சாப்பிட்டது போதும் என்ற உணர்வை கொடுக்க கூடிய லெப்டின் ஹார்மோன் இயல்பு நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு லெப்டின் ஹார்மோன் அளவு குறைந்து கெர்லின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும்.இதனால் பசி உணர்வு அதிகரிக்கும் எளிதில் அடங்காது விளைவு உடல் பருமன்.
உடல் பருமன்:
உடற்பருமன் எடையை குறைகிறேன் என்பதற்காக பலர் காலை உணவை தவிர்கிறார்கள் பின்பு அடுத்தவேளை அதிகமான் உணவை உட்கொள்கிறார்கள் அது மட்டும் இன்றி நொறுக்கு தீனிகளையும் உட்கொள்கிறார்கள் இதனால் உடல் எடை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.
வாய் நாற்றம் :
காலை உணவை மென்று சாப்பிடும் போது எச்சில் சுரப்பியில் உள்ள லைஷோசைம் வாய்பகுதியில் மையமிட்டுள்ள கிருமிகளை அளிக்கும்.அதுவே உணவை சாப்பிடாமல் விட்டால் கிருமிகளின் ஆதிக்கம் பெருகி விரைவில் வாய்நாற்றம் எடுக்க வாய்ப்புள்ளது.
காலை உணவை தவிர்பதினால் இவ்வளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும் ஆகவே நண்பர்களே காலையில் எடுக்க வேண்டிய உணவை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கும் நல்லது அப்பொழுதுதான் நாம் நன்றாக இயங்க முடியும் நோய் பிடியில் இருந்து தப்பிக்கவும் முடியும்.
உணவை தவிர்க்க வேண்டாம் ! நோயில் மாட்டி தவிக்க வேண்டாம் !
நண்பர்களே இன்னைக்கு நம்ம பேஜ்ல பாத்த உணவு குறித்த தகவல் நன்மை உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.அடுத்த ஒரு நல்ல தகவலில் நம்ம பேஜ் ல சந்திக்கலாம்.
நன்றி!
No comments:
Post a Comment