தலைமுடி என்பது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி,தலைமுடி என்பது தன்னுடைய அழகை வெளியில் காட்டிக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமாகும்.
இப்பொழுதெல்லாம் தலைமுடி உதிர்வது ஆக இருந்தாலும் சரி,இளநரை ஆக இருந்தாலும் சரி சிறிய வயது முதலே அனைவருக்கும் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.
வெளியில் ஹேர் ஆயில் விதவிதமாக விற்பனைக்கு இருந்தாலும் சரி டாக்டர் பரிந்துரைத்த ஹேர் ஆயில் ஆக இருந்தாலும் சரி நல்ல பலன்களை கொடுப்பது இல்லை.
நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய சுத்தமான ஹேர் ஆயிலை நாமே வீட்டிலே சில பொருட்களைக் கொண்டு தயார் செய்து உபயோகப்படுத்தி வந்தால் உடனடியான பலன்களை ஒரே வாரத்தில் அனுபவரீதியாக உணரலாம்.
அந்த இயற்கையான ஹேர் ஆயிலை தயாரிக்க என்னென்ன பொருள் வேண்டும் என்பதை கீழே பார்த்து அதன்படி செய்து உபயோகபடுத்தி நல்ல பலன்களை அனுபவியுங்கள்.
தேவையான பொருள்கள்:-
1- சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
2- கருவேப்பிலை ஒரு கைப்பிடி
3-மருதாணி இலை ஒரு கைப்பிடி
4- வெந்தயம் ஒரு கைப்பிடி
5- பெரிய நெல்லிக்காய் 2
6- கற்றாைழை நெல்லி காய் அளவு
7-தேங்காய் எண்ணெய் 100ml
8-நல்ல எண்ணெய் 100ml
மேலே சொன்ன எட்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு அடுப்பில் இரும்புச் சட்டியை வைத்து தேங்காய் எண்ணையும் நல்ல எண்ணெயும் ஊற்றி அதன் பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து ,மிதமான சூட்டில் 30 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும்.
இந்த காய்ச்சலை உடனடியாக ஃபில்டர் பண்ணாமல் மூன்று நாட்கள் வெயிலில் படும் வகையில் வைத்து அதன் பிறகு பில்டர் பண்ணி உபயோகப்படுத்தினால் இதனுடைய பலன்களை ஏழே நாட்களில் உணரலாம் .இதனுடைய வீடியோ லிங்க் கீழே உள்ளது.
https://youtu.be/swce4pWSdaU
No comments:
Post a Comment