வீட்டில் இருந்தவருக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிப்பு - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, October 16, 2019

வீட்டில் இருந்தவருக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிப்பு

       காஞ்சிபுரத்தில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டியதாக உளுந்தூர்பேட்டையில் இருக்கும் ஒருவருக்கு ,மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அவரது மொபைல் எண்ணுக்கு அவதாரம் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற குறுஞ்செய்தி  வந்துள்ளது. இந்த செய்தி அங்கு மிகவும் பரப்பரப்பாக உள்ளது.

      விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகில் உள்ள எறையூர் கிராமத்தை சோ்ந்தவா் ஆமோஸ் இவரின் தந்தையார் அந்தோணிசாமி ஆவார். கடந்த செவ்வாய்க்கிழமை இவா் வீட்டில் இருந்தபோது, இவரது செல் நம்பருக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.58 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.



         தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதற்கு அபராதம் விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அவா் அதிா்ச்சி யடைந்தாா்.

        இதன்பிறகு அதை விசாரித்த பொழுது
போக்குவரத்து விதி மீறல்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்குவதற்கு பதிலாக, நவீன கையடக்க கருவிகள் பயன்படுத்தப்பட்டு தமிழக போக்குவரத்து காவல்துறையினரால்          e-செல்லான் அனுப்பும் முறை தமிழக காவல்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

      இந்த முறையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபரின் வண்டியின் பதிவு எண்ணை பதிவு செய்தால் அந்த பதிவு எண்ணின் முழு விலாசமும், நபரின் பெயர், வயது அனைத்தும் வந்துவிடும். இதனால் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் ரொக்க பணம் இல்லாமல் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வந்துள்ளது.

      விதிமீறும் இரு சக்கர வாகன ஓட்டியின் பெயா், முகவரி, வண்டியின் பதிவெண், சேஸ் எண் ஆகிய விவரங்கள் சரியானவைதானா என்பதை உறுதி செய்த பிறகே காவல் துறையினர் அபராத வழக்குப் பதிந்து இ-சலானை வழங்க வேண்டும்.

       வாகன ஓட்டிகள் தவறான பதிவெண்ணை பொருத்தி ஓட்டி வரும்போது, அந்த பதிவு எண்ணைக் கொண்டு வழக்குப் பதிவு செய்தால், உண்மையான வாகன ஓட்டி தான் பாதிப்புக்குள்ளாவார். ஆகவே, காவல் துறையினர் கவனமாக பணியாற்றி, உண்மையாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இதன் மூலம் திருட்டு வாகனமாக இருந்தால் அதை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

No comments:

Post a Comment