நாளை முதல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இலவசமாக லட்டு வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகிலேயே மிகவும் பழமையான கோவிலில்களில் மதுரை மீனாக்ஷி அம்ம்மன் சுந்தரேசுவரர் கோவிலும் ஒன்று.
ஆயிரம் ஆண்டுகள்பழமைவாய்ந்த இந்த கோவில் உலகபிரசித்திபெற்ற கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கனக்கான பக்தர்கள் வந்து மீனாக்ஷி அம்மனையும்,சுந்தரேசுவரரையும் தரிசனம் செய்கின்றனர்.
இதையொட்டி சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி போல இங்கும் இலவச லட்டு கொடுக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அதைபோல் நாளைமுதல் தரிசனம்செய்யும் பக்தர்கள் அனைவர்க்கும் இலவசமாக லட்டு வழங்கப்படும.
இந்த லட்டு 30கிராம் எடை அளவு இருக்கும்,பக்தர்கள் இந்த லட்டை முக்குறுணி விநாயகர் சன்னிதி அருகில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இலவச லட்டு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
காலை முதல் இரவு வரை தரிசனம் செய்யும் அணைத்து பக்தர்களுக்கும் இலவசமாக இந்த லட்டு வழங்கப்படும் .
மீனாக்ஷி அம்மன் கோவில் வைகை ஆற்றங்கரையில் ,மதுரையின் மத்தியில் அமைந்துள்ளது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு திருவிழா கோலமாக கொண்டடப்படுகிறது .
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப் பட்டாலும் மதுரையில் கொண்டடப்படுவதுதன் சிறப்பு .
இந்த கோவில் தேவலோகத்தின் அரசனான இந்திரனால்கட்டப்பட்டது என்பது இன்றும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment