ஒரு சில காரணத்தால் பெண்களுக்கு,ஆண்களுக்கும் முடி உதிரும் .சத்து குறைபாட்டினால் முடி உதிரும் .இரும்புசத்து குறைபாட்டினாலும் ,மனஅமைதி இல்லான்மை, உஸ்ணத்தால் ,நிம்மதி இல்லாத உறக்கம் ,மன அழுத்தம் போன்ற காரணத்தாலும் முடி உதிரும் .இது போல பல்வேறு காரங்கள் உள்ளன.
பொதுவாக ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் முடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது .முடி அதிகம் உதிர்ந்து சொட்டை ஆய்ருச்சே என பயப்படுபவர்க்கு நான் சொல்லக்கூடிய விஷயத்தை நீங்கள் தொடர்ந்து செய்தால் சொட்டையான இடத்தில் கூட முடி வளர ஆரமிக்கும் .முதலில் நீங்கள் எதைப்பற்றியும் கவலை படக்கூடாது .சத்தான சாப்பாடு சாப்பிட வேண்டும் .தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் .தேங்காய் எண்ணை தவிர வேறு எந்த எண்ணையும் தலையில் தேய்க்ககூடாது..
- நம் வீட்டில் தினமும் பயன்படுத்தக் கூடிய சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பத்து ,பதின்னைந்து எடுத்து மிக்ஸில் போட்டு தண்ணீர் சேர்க்கமால் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும் .
- அதை ஒரு கிண்ணத்தில் சார் பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும் .
- சக்கையை கீழே போட வேண்டும் வெங்காயசாரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் விளக்குஎண்ணையை ஊற்றி நல்லா கலந்து அதை சொட்டையான இடத்தில் தேய்க்கவேண்டும் .
- தலையில் எல்லா இடங்களிலும்இந்த சாரை தேய்க்கலாம் .
- இந்த சாரை தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும் .பிறகு அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும் .
- அரைமணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும் .
இப்படி வாரத்தில் 2 முறை செய்தால் போதும் .ஆறு மாதம் வரை இப்படி செய்துவந்தால் முடி வளராத இடத்தில் கூட முடி வளர ஆரமிக்கும் .சொட்டையான இடத்திலும் முடி வளர ஆரமிக்கும்.கருமையாகவும் ,அடர்த்தியாகவும் வளரும் .வேற என்னவேண்டும் இதை செய்து பாருங்கள் .
No comments:
Post a Comment