நீங்கள் நலவாரிய அட்டை வச்சிருக்கிங்களா? உங்கள் பிள்ளைகள் 6 முதல் பட்டபடிப்பு வரை படிப்பதற்கு நலவாரியத்தின் மூலம் உதவி தொகை பெறலாம்.உதவி தொகை மட்டுமல்லாமல் திருமண உதவித்தொகை ,மகபேறு உதவித்தொகை ,இயற்கை மரணம் ,போன்ற அனைத்தும் உதவிதொகையும் இந்த நலவாரிய அட்டை மூலம் பெறலாம் .இந்த நலவாரியஅட்டை இல்லாதவர்கள் ஈஸியா அப்ளையும் பண்ணிக்கலாம். .
6 முதல் 12வகுப்புக்கான உதவி தொகை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம் .
உதவித்தொகை விவரங்கள் :
கல்வி (ஒவ்வொரு ஆண்டிற்கும்)
6 முதல் 9-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,000💵
10-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,000💵
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
11-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,000💵
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
12-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,500💵
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
10-ம் வகுப்பு தேர்ச்சி : ரூ.1,000💵
(ஆண்,பெண் இருவருக்கும்)
12-ம் வகுப்பு தேர்ச்சி : ரூ.1,500💵
(ஆண்,பெண் இருவருக்கும்)
பட்டபடிப்பு
முறையான பட்டபடிப்பு : ரூ.1,500💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.1,750💵
முறையான பட்டமேற்படிப்பு : ரூ.4,000💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.5,000💵
தொழில்நுட்ப பட்டபடிப்பு : ரூ.4,000💵
(சட்டம், பொறியியல், மருத்துவம்
கால்நடை மருத்துவம் மற்றும்
இணைபடிப்புகள்(allied courses)
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.6,000💵
தொழிற்நுட்ப பட்டமேற்படிப்பு : ரூ.6,000💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.8,000💵
ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு : ரூ.1,000💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.1,200💵
தேவையான ஆவணங்கள் :
- முதலில் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிப்பதற்க்கான கல்வி சான்று வாங்கிவர வேண்டும் .
- குழந்தையின் ஆதார்
- ரேஷன்கார்டு
- நலவாரிய அட்டை
- பேங்க் புக் {Entry page}
- நலவாரிய அட்டை வைத்திருப்போரின் ஆதார்
செய்ய வேண்டியவை:
- முதலில் https://tnuwwb.tn.gov.in/maintenance.html இந்த லிங்கில் போக வேண்டும் .
- நலவாரியம் ஓபன் ஆனதும் அதில் உள்நுழைவு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்,
- அதில் userid-யில் பதிவு எண்ணை போடவேண்டும் .password-க்கு உங்கள் பிறந்த தேதி போட்டு லாகின் பண்ண வேண்டும்
- லாகின் ஆனதும் உங்கள் குழந்தைகள் என்ன கல்வி படிக்கறன்களோ அந்த கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும்
- பின்னர் உங்கள் details வரும் .அதில் நலவாரியம் அட்டையை பதிவேற்றவேண்டும் .பிறகு பேங்க் புக் Entry page போட்டதை பதிவேற்றவேண்டும்.
- உங்கள் குழந்தைகள் என்ன வகுப்பு படிக்கிறன்களோ அந்த வகுப்பை SELECT பண்ணவேண்டும் .SELECT பண்ணதும் பக்கத்தில் எவ்வளவு AMOUNT உங்களுக்கு வரும் என்பது திரையில் தெரியும்.(உதவித்தொகை பற்றி முழு விவரம் அறிய கீழே இருக்கும் லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்)
- பள்ளியின் பெயர் ,பள்ளியின் முகவரி ,அனைத்தும் டைப் பண்ணவேண்டும்.பின்னர் கல்விசான்று பதிவேற்றவேண்டும்.
- பிறகு குழந்தையின் ஆதரை பதிவேற்றவேண்டும்.
- பிறகு claim form-யை FILL பண்ணி தொழிற்சங்கத் தலைவரின் சீல் மற்றும் கையெழுத்துடன் பதிவேற்ற வேண்டும்.
- கடைசியாக வினப்பதாரரின் போட்டோவை நேரடியாக எடுத்து submit என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதுக்கு அப்புறம் அவர்களுடைய மொபைல்க்கு ஒரு message வரும். அதை வைத்து நாம் approved ஆச்சா என்பதை செக் பண்ணிக்கலாம்.வீடியோ மூலம் பார்க்க வேண்டுமா?
No comments:
Post a Comment