நீங்களாகவே உங்களது மொபைல் மூலம் உங்களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் விண்ணபிக்கலாம் அது எப்படினு பாப்போம் வாங்க.
ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் :
* குழந்தையின் ஆதார்
* அப்பா , அம்மா ஜாதி சான்றிதழ் அல்லது படிப்பு சான்றிதழ்
* அப்பா , அம்மா ஆதார்
* குழந்தையின் போட்டோ
- முதலில் ஜாதி சான்றிதழ் விண்ணபிக்க TNEGA என்ற அதிகார பூர்வமான இணைய தளத்திற்கு செல்ல வேண்டும் .
- இணைய தளத்திருக்கு சென்ற பின்பு உங்களுக்கு தனியாக ஒரு Account-யை create பண்ணி அதை லாகின் பண்ணவும்.
- லாகின் பண்ணதும் அதில் Revenue Department -யை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் Community Certificate -யை Select பண்ண வேண்டும் .
- Select பண்ணதும் Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும்
- யாருக்கு ஜாதி சான்றிதழ் போட போறோமோ அவர்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்யவேண்டும் .
- டைப் பண்ணதும் Search என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .
- அதில் Can Number என்ற பாக்ஸை கிளிக் செய்து ,ஆதார் நம்பரை டைப் செய்து ,பிறந்ததேதி-யை டைப் செய்து ,மொபைல் நம்பர் போட்டு OTP -யை sent பண்ண வேண்டும் .
- OTP போட்டதும் Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .
- இதை கிளிக் செய்ததும் ஒரு Application form ஓபன் ஆகும் .அதை எல்லாம் செக் பண்ணிட்டு கீழே வரவேண்டும் .
- அப்பா Community-யை select பண்ணவேண்டும் .அப்பாவுடைய Cast -யை Select பண்ணவேண்டும்.பின் Community-யை select பண்ணவேண்டும் .
- அதே போல் அம்மாவுடைய Community-யை select பண்ணவேண்டும். அம்மாவுடைய cast -யை select பண்ணவேண்டும்.
- கீழே Yes or No கேப்பாங்க , அதை நீங்கள் No -வை select பண்ணவேண்டும் பிறகு Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு போட்டோ பதிவேற்றம் செய்யவேண்டும் , பிறகு ரேஷன்கார்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .பின் குழந்தையின் ஆதார் பதிவேற்றவேண்டும்
- பிறகு அப்பா Community-யை பதிவேற்றவேண்டும்
- பின்னர் அப்பா ஆதாரை self ஆதார் என்று பதிவேற்றவேண்டும் .
- மேலே Download Self என்று இருக்கும் . அதை டவுன்லோட் செய்யவேண்டும் . அதற்கு அடுத்து கையெழுத்து Option வரும்.
- அந்த கையெழுத்தை செட் பண்ணி self -ஆக பதிவேற்றவேண்டும். பின்னர் Make a Payment-யை கிளிக் செய்து ரூ -60 ஆன்லைனில் கட்ட வேண்டும் .
- கட்டி முடித்ததும் ஒப்புக்கைச் சீட்டு என்ற self வரும்.அதைவைத்து நாம் Status செக் பண்ணிக்கலாம் .
- Status செக் பண்ணிட்டு ஜாதி சான்றிதழ் Print எடுத்துக்கலாம்.
No comments:
Post a Comment