நீங்கள் நலவாரிய அட்டை வச்சிருக்கீங்களா ,அதன் மூலம் நிறைய உதவி தொகை பெறலாம் .அதில் ஓன்று தான் இயற்கை மரணம் .ஒருவர் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வைத்திருந்தால் அவர்கள் இயற்கையாகவே மரணம் அடைந்தால் அவருக்கான உதவித்தொகை ரூ 55,000 வரை கிடைக்கும். ஓட்டுனர் / கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ55,000 கிடைக்கும். இதர நலவாரிய அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கும் ரூ35,000 கிடைக்கும் இந்த உதவித்தொகை எப்படி பெறலாம் என்பதை கீழே பார்க்கலாம் .
இறந்தவருக்கு தேவையான ஆவணங்கள்
- இறந்தவரின் ஆதார் அட்டை
- இறப்பு சான்றிதழ்
- நலவாரிய அட்டை
- ரேஷன்கார்டு
நியமனதாரரின்/வாரிசுதாரரின் ஆவணங்கள் :
- ஆதார்
- ரேஷன்கார்டு
- நலத்திட்ட உறுதிமொழிச் சான்று
- வாரிசு சான்றிதழ்
- வாரிசுதாரர்/நியமனதாரரின் வங்கி கணக்கு புத்தகம்
- கீழே உள்ள Natural Death Claim என்ற லிங்கைக் கிளிக் செய்து உள் செல்க
- பிறகு உள்நுழைவு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
- அதில் உங்கள் பதிவு எண்ணை டைப் பண்ணவேண்டும் .பிறகு கடவு சொல்லை டைப் செய்து லாகின் பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- அடுத்து ஓபன் ஆகும் பக்கத்தில் claim என்ற பட்டனைக் கிளிக் செய்து Natural Death என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும் .
- இப்போது ஓபன் ஆகும் படிவத்தில் கேட்கக்கூடிய விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும். மேலும் மேற்கூறிய ஆவணங்களை ஸ்கேன் செய்து வேண்டிய இடங்களில் upload செய்ய வேண்டும்.
- இறுதியாக நியமனதாரரை / வாரிசுதாரரை live புகைப்படம் எடுத்து submit செய்தால் உங்களுக்கு preview காண்பிக்கும் அவற்றை செக் செய்து விட்டு மீண்டும் sumbit செய்தால் உங்களுக்கு ஒரு Reference நம்பர் வரும். அதை Note செய்து கொள்ளவும்.
- பின் கீழே உள்ள Status Check என்ற link யைக் கிளிக் செய்து உங்கள் Reference Number மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்து Status செக் செய்து கொள்ளவும்.
- உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் Approve ஆனதும் 90 நாட்களுக்குள் பணம் நியமனதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
- நலத்திட்ட உறுதிமொழிச் சான்றிதழை கீழே உள்ள Form என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கி கொள்க.
Apply
Status Check
FORM
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment