Power Shoutdown இனி ஆன்லைனில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் | Powershoutdown Check in Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, October 4, 2023

Power Shoutdown இனி ஆன்லைனில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் | Powershoutdown Check in Online | Techinfo


                                        
 

தமிழ்நாடு முழுவதும் மின் வாரியங்களின் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஆனால் அது என்றைக்கு என்பதை முதல் நாள் வரக்கூடிய செய்தி தாள்களில் மட்டுமே வெளிவரும் .. எங்கு,எப்போது மின் தடை, எவ்வளவு நேரம் மின்தடை என்பதையும்  முன்னராகவே  அதை ஆன்லைன் வாயிலாகவே Check செய்து கொள்ளலாம் . அதற்கு ஏற்ற மாதிரி நம்முடைய பணித்திட்டங்களை மாற்றி அமைக்க மிக ஏதுவாக இருக்கும் .

எவ்வாறு Check செய்வது என்பதை பார்க்கலாம் !

  • https://www.tangedco.org/ - என்ற websiteக்குள்  செல்லவும் .
  • வலது பக்க மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும் .
  • அதில் Consumer Info என்ற பகுதியை கிளிக் செய்யவும் .
  • இப்பொழுது Scheduled Outage Information என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • அடுத்து ஓபன் ஆகக்கூடிய pageல் Select Circle என இருக்கும் இடத்தில் உங்களுடைய மாவட்டத்தை select செய்யவும் .
  • அருகில் உள்ள CAPTCHA வை சரியாக பார்த்து டைப் செய்து submit என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • இப்பொழுது உங்களுடைய மாவட்டத்தைச்  சேர்ந்த ஊர்களில் என்றைக்கு மின்தடை  ( Power Shut Down ) என்பதை தேதியுடனும் பக்கவாட்டில் நேரத்துடனும் காண்பிக்கும்.
  • இந்த விவரங்களை சரிபார்த்து உங்களுடைய பணித் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்க .
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment