இன்றைய கால கட்டத்தில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்துகின்றனர். மொபைல் வைத்திருக்கும் அனைவரும் கூகுளுக்கு சொந்தமான எந்த ஒரு சேவையை பெற விரும்பினாலும் அதாவது யூடியூப், கூகுள், குரோம் போன்ற எந்த ஒரு சேவையை பயன்படுத்தவிரும்பினாலும் இ-மெயில் கணக்கு என்பது அத்தியாவசியமாகிறது. அதனால் பல கோடி கணக்கானோர் ஜி-மெயில் ஐடியை பயன்படுத்தி வருகின்றனர். தேவையற்ற ஜி-மெயில்களால் கூகுள் இலவசமாக தரும் 15 GB ஸ்டோரேஜ் நிரம்பிவிடுகிறது. அப்படி முழு ஸ்டோரேஜ்-உம் நிரம்பி விட்டால் மாதந்தோறும் கூகுளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த ஆயிரக்கணக்கான ஜி-மெயில்களை ஒவ்வொன்றாக Delete செய்வது என்பது மிகப் பெரிய வேலை சுமையை ஏற்படுத்தி விடும்.இதனால் தான் கூகுள் தானாகவே அழிக்கும் ஆட்டோ Delete என்ற optionனை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டோ Delete option இல்லாதவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வழிமுறைகளில் இ-மெயில்களை Delete செய்யலாம்.
- முதல் வழி, ஜி-மெயில் Search box இல் சென்று "Attachment Large 10MB " என்று டைப் செய்தால் 10 MB க்கும் அதிகமான ஸ்டோரேஜ் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அவற்றை மொத்தமாக select செய்து Delete Icon னை கிளிக் செய்து நீக்கலாம்.
- இரண்டாவது வழி, உங்களுடைய பழைய மெயில்களை Delete செய்வது. ஜி-மெயில் Search boxஇல் சென்று உங்களுடைய பழைய மெயில்கள் அதாவது குறிப்பிட்ட பெயர் அல்லது முகவரியை டைப் செய்து அனைத்து மெயில்களையும் select செய்து Delete icon னைக் கிளிக் செய்து நீக்கலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment