உங்களுக்கு நலவாரிய அட்டையின் மூலம் பென்சன் தொகை வாங்கவில்லையா? உங்ககிட்ட ஆயுள்சான்று இருந்தால்தான் பென்சன் வாங்க முடியும். இந்த ஆயுள்சான்று வருஷம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் Live certificate கொடுக்கவேண்டியிருக்கும் .இப்போ ஆன்லைன் மூலம் Live certificate எடுக்கலாம். அது எப்படி என்பதை கீழே பார்க்கலாம் .
- முதலில் https://tnuwwb.tn.gov.in/ இந்த லிங்கில் போகவேண்டும் .அதில் ஆயுள்சான்று என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- கிளிக் பண்ணதும் உங்களுடைய பதிவு எண்ணை டைப் பண்ணவேண்டும் .
- பிறகு சின்ன பாக்சை கிளிக் செய்து மொபைல் நம்பரை டைப் செய்யவேண்டும் .
- பிறகுSent OTP கொடுக்க வேண்டும் .OTP போட்டு Next என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- இதில் அவங்களுடைய details வரும் .ஆனால் ஒரு ,சில பேருக்கு அவர்களுடைய details வராது .details இல்லாதவர்கள் முதலில் அவங்களுடைய details fill பண்ணவேண்டும் .
- பிறகு Next என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அதில் அவங்களுடைய முகவரி details கொடுக்க வேண்டும் .
- அதற்கு அடுத்து அவங்களுடைய Bank details கொடுக்கவேண்டும் .
- பிறகு அவங்களுடைய ஆதார் வைத்திருக்கும் படி live photo எடுக்க வேண்டும்
- பிறகு submit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு ஒரு reference நம்பர் வரும் அதை வைத்து நாம் status செக் பண்ணிக்கலாம் .
No comments:
Post a Comment