தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக இந்தியாவில் உள்ள மாநில அரசுகளால் மக்களுக்கு வழங்கப்படும் ஆவணம் தான் ரேஷன்கார்டு. இதை நாம் பொது அடையாளமாகவும் பயன்படுத்தலாம். டிஜிட்டல் இந்தியாவில் நாம் எந்த ஒரு ஆவணத்தையும் டிஜிட்டல் மூலம் பெற இயலும். அந்த வகையில் ரேஷன்கார்டையும் டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். எவ்வாறு டவுன்லோட் செய்யலாம் என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள E-Smartcard என்ற லிங்கில் செல்லவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் உங்கள் ரேஷன்கார்டு உடன் இணைக்கப்பட மொபைல் எண்ணை டைப் செய்து கீழே உள்ள captcha வை சரியாக கட்டத்தில் உள்ளீடு செய்து "பதிவு செய்" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து "பதிவுசெய்" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது " மின்னணு கோப்பு அட்டை பதிவிறக்கவும்" என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுடைய டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டு டவுன்லோட் ஆகிவிடும்.
E-SMART CARD
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment