இனி PVC ஆதார் கார்டு உங்கள் வீடு தேடி வரும் ! | How to order Aadhar PVC Card ? | Tech info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, November 27, 2023

இனி PVC ஆதார் கார்டு உங்கள் வீடு தேடி வரும் ! | How to order Aadhar PVC Card ? | Tech info

 ஆதார் அட்டை என்பது தனிமனித அடையாள அட்டையாகும். அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது. இந்த ஒரிஜினல்  அட்டையை ஆன்லைனிலே டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும் ஆதார் PVC கார்டு வேண்டுமென்றாலும் அதை நாமே மொபைல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.எவ்வாறு விண்ணபிக்கலாம் என்பதை பார்க்கலாம்!
  • முதலில் கீழே உள்ள PVC Card Apply என்ற link ல் உள் செல்லவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  •  இப்போது உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
  • பின் கீழே கட்டத்தில் உள்ள Captcha வை சரியாக டைப் செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள்  ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதை Enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • பின் கீழே Order Aadhar PVC Card என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்துமாறு காண்பிக்கும் கீழே Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் காண்பிக்கும். அவற்றை செக் செய்து விட்டு Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது கீழே உள்ள கட்டத்தை select செய்துவிட்டு Make Payment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து நீங்கள் பணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்து ரூ.50 செலுத்தவும்.
  • பணம் செலுத்தியதும் Download Acknowledgement என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது வரும் Acknowledgement நம்பரை வைத்து status செக் செய்துகொள்ளலாம். 
  • விண்ணப்பித்த ஒரே வாரத்தில் உங்கள் வீடு தேடியே PVC ஆதார் கார்டு வந்துவிடும்.

PVC Card Apply

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment