10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தொலைந்து விட்டதா? உங்கள் வீடு தேடி வரும்! | 10,12th Lost Marksheet Apply In Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, December 24, 2023

10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தொலைந்து விட்டதா? உங்கள் வீடு தேடி வரும்! | 10,12th Lost Marksheet Apply In Online | Techinfo

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மிகவும் அவசியமானது. அவற்றை தொலைத்துவிட்டால் திரும்ப பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் தற்போது தொலைந்துபோன 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தொலைந்து போனால் அவற்றை மீண்டும் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தால் அசல் மதிப்பெண் பட்டியலின் நகல் உங்கள் வீட்டிற்கே வரும்! எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்...

தேவையான ஆவணங்கள் 

  1. மதிப்பெண் பட்டியல் தொலைந்து போனதற்கான FIR Copy 
  2. புகைப்படம்
  3. பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் அல்லது TC 

  • கீழே உள்ள  Duplicate Certificate Apply என்ற linkயைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில்  Document Type என்ற கட்டத்தை கிளிக் செய்தால் அதில் நான்கு விதமான Options காண்பிக்கும். 
  • 1. Duplicate Certificate - இது அசல் மதிப்பெண் பட்டியலின் நகல் உங்கள் வீட்டிற்கே வரும். ரூ.505 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • 2.Migration Certificate - மதிப்பெண் பட்டியலின் நகல் உங்கள் வீட்டிற்கே வரும். ரூ.505 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • 3.Certificate Copy Of Mark Sheet - அசல் மதிப்பெண் பட்டியலின் மின்னணு  நகல் உங்கள் மெயில் ஐடி க்கு வரும்.ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்
  • 4.Triplicate Certificate -  இது அசல் மதிப்பெண் பட்டியலின் இரண்டு நகல் உங்கள் வீட்டிற்கே வரும். ரூ.755 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • மேலே குறிப்பிட்ட 4 விதமான Documents இல் நீங்கள் விருபபட்டதை தேர்வு செய்க.
  • பின் கீழே நீங்கள் தொலைத்த மதிப்பெண் பட்டியலின் வகுப்பு வகை, Exam Roll Number அல்லது Registration Number , exam எழுதிய வருடம், மாதம்,உங்கள் பெயர், மொபைல் நம்பர், ஈமெயில் ஐடி  போன்றவற்றை நீங்கள் தொலைத்த மதிப்பெண் பட்டியலில் உள்ளவாறு டைப் செய்து கொள்ளவும்.
  • அடுத்து கீழே உங்கள் முகவரியை சரியாக டைப் செய்யவும்.
  • பின் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை Upload செய்து  கீழே உள்ள Captcha வை டைப் செய்து Proceed With Payment என்ற பட்டனைக் கிளிக் செய்து கட்டணம் செலுத்திய பின் உங்களுக்கு ஒரு Reference Number  வரும் அதை வைத்து Status Check செய்துக்கொள்ளலாம்.
  • இதே பக்கத்தில் மேலே Status Check என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். Approve ஆகிவிட்டால் உங்களுடைய மதிப்பெண் பட்டியல் வீட்டிற்கே வந்துவிடும். 
  •  மேலே Download Certificate என்ற பட்டனைக் கிளிக் செய்து தேவைப்பட்டால் உங்களுடைய மின்னணு மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்துகொள்ளலாம். 

Duplicate Certificate Apply

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...



No comments:

Post a Comment