Web Whatsapp யூஸ் செய்கிறவர்கள் கட்டாயம் பார்க்கவும்! | How to Lock Web Whatsapp ? | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, December 8, 2023

Web Whatsapp யூஸ் செய்கிறவர்கள் கட்டாயம் பார்க்கவும்! | How to Lock Web Whatsapp ? | Techinfo



இன்றைய காலகட்டத்தில் அனைவரும் Whatsapp பயன்படுத்துகின்றனர். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உடனடியாக ஒரு செய்தியினை தெரிவிக்கவும் தேவையான ஆவணங்கள் அனுப்புவதற்கும் Whatsapp app மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நமது மொபைலில் உள்ள  Whatsapp யை  PC அல்லது லேப்டாப்பிலும் Web Whatsapp மூலமாக Connect செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு வேறொருவர் PC அல்லது லேப்டாப்பில் Connect செய்துவிட்டால் அதை எளிதாக Logout செய்ய இயலாது. இதனால் நம்முடைய Privacy பாதிக்கப்படும். அந்த Web Whatsapp யை உடனடியாக எவ்வாறு Lock செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்!
  1. PC அல்லது லேப்டாப்பில் உள்ள Web Whatsapp யை ஓபன் செய்து கொள்க.
  2. இப்போது வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளி Icon னைக் கிளிக் செய்யவும்.
  3. அதில் Setting என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  4. அடுத்து Privacy என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  5. இப்போது கீழே கடைசியாக உள்ள Screen Lock  என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  6. ஓபன் ஆகும் பக்கத்தில் கட்டத்தை Select செய்து கொள்ளவும்.
  7. இப்போது உங்களுக்கு விருப்பமான Password கொடுத்து மீண்டும் அதை Confirm Password  கொடுத்து Ok என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  8. இப்போது மூன்று விதமான Options காண்பிக்கும். After 1 Minute , After 15 Minutes , After 1 hour இதில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து கொள்க.
  9. PC அல்லது லேப்டாப்பில் உள்ள Web Whatsapp யை ஓபன் செய்து கொள்க.
  10. இப்போது உடனடியாக  Web Whatsapp Lock செய்ய விரும்பினால்  வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளி Icon னைக் கிளிக் செய்யவும்.
  11. அதில் Lock Screen என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  12. இப்போது உடனடியாக உங்களுடைய Web WhatsApp Lock ஆகி விடும்.
  13. அடுத்து  அதை Unlock செய்ய விரும்பினால் நீங்கள் Set செய்த Password டை கொடுத்து தான் ஓபன் செய்ய முடியும்.
  14. ஒருவேளை உங்களுக்கு Password மறந்து விட்டால் மீண்டும் Logout செய்து மீண்டும் Connect செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment