உங்கள் வோட்டர் ஐடி தொலைந்துவிட்டதா ? உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்துகொள்ளலாம்! | Voter PVC Card Order In Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, December 11, 2023

உங்கள் வோட்டர் ஐடி தொலைந்துவிட்டதா ? உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்துகொள்ளலாம்! | Voter PVC Card Order In Online | Techinfo

உங்களுடைய  வாக்காளர் அட்டை தொலைந்து விட்டதா? அல்லது  பழைய அட்டை சேதமடைந்து விட்டதா? கவலை வேண்டாம்!   வோட்டர்   PVC கார்டு ஆன்லைன் மூலமாகவே எளிதாக எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாகவே பெற விண்ணப்பித்துக்கொள்ளலாம். எவ்வாறு விண்ணபிக்கலாம் என்பதை பார்ப்போம் !

  • கீழே உள்ள PVC Order Voter என்ற link யைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் மேலே உள்ள  Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Username மற்றும் Password கொடுத்து கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள  கட்டத்தில்  சரியாக  டைப் செய்யது Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு  Account இல்லை என்றால் மேலே உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு Account create செய்து பின் Login செய்யவும்.
  • இப்போது திரையில் தெரியும் Form8 என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகக்கூடிய பக்கத்தில் Self  மற்றும் Others Elector என்ற இரண்டு options இருக்கும். (உங்களுக்கு வோட்டர் ஐடி  விண்ணப்பிக்க   விரும்பினால் Self என்ற option னையும் மற்றவர்களுக்கு விண்ணப்பிக்க  விரும்பினால்  Others Elector என்ற option னையும் select செய்யவும்.) select செய்த பின் உங்களுடைய வோட்டர் ஐடியில் உள்ள EPIC நம்பரை டைப் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Issue Of Replacement EPIC Without Correction என்ற option னை select செய்து ok என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகும் படிவத்தில் முதலில் உங்களுடைய மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி காண்பிக்கும் கீழே உள்ள Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து மூன்றாவதாக உள்ள பகுதியில் மூன்று Option கொடுக்கப்பட்டிருக்கும் அதாவது உங்களுடைய அட்டை  தொலைந்து போயிருந்தால் முதலில் உள்ள Lost என்ற பட்டனைக் கிளிக் செய்து கீழே  வோட்டர் ஐடி தொலைந்து போனதற்கான FIR Copy அல்லது Police Report டை upload செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். அல்லது இயற்கை சீரழிவுகளால் அதாவது மழை அல்லது தீ போன்றவற்றால் வோட்டர் ஐடி சேதமடைந்தால் இரண்டாவது option னைக் கிளிக் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.அல்லது உங்களுடைய வோட்டர் ஐடி கிழிந்து விட்டாலோ/ உடைந்து விட்டாலோ மூன்றவதாக உள்ள Multilated  என்ற option னைக் கிளிக் செய்து கீழே உள்ள next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Place யை டைப் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது கட்டத்தில் உள்ள Captcha வை கீழே சரியாக டைப் செய்து Preview &Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு preview application காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு  கீழே உள்ள Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.  
  • submit செய்ததும் ஒரு Acknowledgement number வரும் அதை note செய்து கொள்ளவும். அல்லது அருகில் Download Acknowledgement  என்ற பட்டனைக் கிளிக் செய்து Acknowledgement  applicationனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  •   இந்த Acknowledgement  நம்பர் வைத்து Status செக் செய்துகொள்ளலாம்.
  • தேர்தல் அதிகாரிகளால் சரிபார்ப்பு நிறைவடைந்த பின் உங்களுடைய   வாக்காளர் அடையாள அட்டை போஸ்ட் ஆபீஸ் மூலமாக உங்கள் வீட்டிற்கே வந்துவிடும். 

PVC Order Voter

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment