இரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் தங்களுடைய குழந்தைகளை கூட்டிச் செல்லும் முன் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பை நினைவில் கொள்ளவும் ! அதாவது இரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்தும் வகையில் நமது இந்திய இரயில்வே சில விதிகளை அறிவித்துள்ளது. அவை என்ன என்பதைப் பற்றி காண்போம்!
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இரயிலில் பயணம் செய்ய அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு பயணச்சீட்டு வேண்டியதில்லை.
- ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயண காப்பீட்டு வசதியை பெற இயலும்.
- ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தனி பெர்த் முன்பதிவு செய்யும்போது முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
- ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரை நீங்கள் முன்பதிவு படிவத்தில் நிரப்பியிருந்தால் அந்த குழந்தைக்கும் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். படிவத்தில் பெயரை நிரப்பவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை .
- ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தனி இருக்கை எடுக்கவில்லை எனில் அந்த குழந்தைக்கு இரயில் டிக்கெட் கட்டணத்தில் பாதியை செலுத்த வேண்டும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment