தமிழ்நாட்டில் பிரபலமான பல்வேறு கோவில்கள் உள்ளன அந்த கோவில்களுக்கெல்லாம் சென்று தரிசிக்க வேண்டும் என பலரும் நினைப்பது உண்டு. ஆனால் சில காரணங்களால் கோவில்களுக்கு சென்று வர இயலாத நிலை ஏற்ப்படும். இனி அந்த கவலை வேண்டும் நீங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என நினைகிறீர்களோ அந்த கோவிலின் பிரசாதம் உங்களை தேடி உங்கள் வீட்டிற்கே வரும். இந்து சமய அறநிலையத்துறை பிரசித்திபெற்ற கோவில் பிரசாதங்களை போஸ்ட் மூலமாக வீட்டிற்கே அனுப்பி வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள "பிரசாதம் பெற" என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் தமிழ்நட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்கள் வரிசையாக காண்பிக்கும்.
- மேலே உள்ள Search Box இல் நீங்கள் பிரசாதம் பெற விரும்பும் கோவிலின் ஊரை டைப் செய்தால் அந்த கோவில் கீழே காண்பிக்கும். அதற்கு வலது புறத்தில் உள்ள "முன்பதிவு செய்ய " என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Pocket Contains the following items இல் உங்களுக்கு வழங்கக்கூடிய பிரசாத பாக்கெட்டில் உள்ள பொருட்களின் பட்டியல் காண்பிக்கும்.
- இப்போது உங்கள் விவரங்கள் கேட்கும் அதை கொடுக்க வேண்டும். கொடுத்த பின் கீழே உள்ள captcha வை டைப் செய்து Terms பட்டனைக் கிளிக் செய்து "சமர்பிக்க" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது அந்த பிரசாத பாக்கெட்டிற்கான தொகையை செலுத்திய பின் உங்கள் வீட்டிற்கே போஸ்ட் மூலம் பிரசாதம் வரும்.
No comments:
Post a Comment