உங்கள் குடும்ப அட்டை தொலைந்துவிட்டதா? இப்படி பண்ணுங்க உங்கள் வீடு தேடி வரும்! | Duplicate Ration Card Apply in Onlie | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, January 12, 2024

உங்கள் குடும்ப அட்டை தொலைந்துவிட்டதா? இப்படி பண்ணுங்க உங்கள் வீடு தேடி வரும்! | Duplicate Ration Card Apply in Onlie | Techinfo

ரேஷன் அட்டை தொலைந்துவிட்டலோ அல்லது ஏதேனும் சேதமடைந்தாலோ அல்லது புதிதாக பெயர் சேர்த்தாலோ/நீக்கம் செய்தாலோ நகல் ரேஷன் கார்டை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து அசல் அட்டை போலவே வாங்கி கொள்ள இயலும். இதற்காக ரூ.50 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் உங்களது வீட்டிற்கே வந்துவிடும். எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்பதை பார்க்கலாம்!

  • கீழே உள்ள Duplicaet Ration Card Apply என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு என்ற பட்டனைக்  கிளிக் செய்யவும்.
  • அதில்  ரேஷன்கார்டுடன் இணைக்கப்பட்ட   மொபைல் நம்பர்  டைப் பண்ணவேண்டும் .
  • பிறகு கொடுக்கப்பட்ட  கேப்சாவை கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்து Sent  OTP கொடுக்கவேண்டும் .
  • உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும்   OTP போட்டு பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும் .
  • இப்போது நகல்  மின்னணு அட்டைக்கான வழிமுறைகள் கொடுக்கபட்டிருக்கும். அவற்றை படிக்கவும்.
  • அடுத்து கீழே உள்ள சின்ன கட்டத்தை select செய்து விட்டு 'பணம் செலுத்த' என்ற பட்டனைக் கிள்சக் செய்து உங்கள் குடும்ப தலைவரது விவரங்கள் கொடுத்து ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். 
  • கட்டணம் செலுத்திய பின் உங்களுக்கு ஒரு ரசீது வரும் அதனுடன் குடும்ப தலைவரது ஆதார் அட்டையை PDF file ஆக Merge செய்து கொள்ளவும்.
  • இப்போது பின் சென்று "நகல் குடும்ப அட்டை அச்சிடும் செயல்முறையை தொடர " என்ற பட்டனைக் கிளிக் செய்து நகல் அட்டை விண்ணப்பம் செய்வதற்கான காரணத்தை டைப் செய்து ரசீதில் உள்ள குறிப்பு எண், தேதி யை select செய்து Merge செய்து வைத்துள்ள  PDF file யை upload செய்து பதிவேற்று என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து agree பட்டனைக் கிளிக் செய்துவிட்டு "தொடர" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு ஒரு Acknowledgement எண் வரும் அதை note செய்து கொள்ளவும் அதை வைத்து status செக் செய்து கொள்ளலாம்.
  • approve ஆகிய பின் உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வீட்டிற்கே வந்து விடும்.

Duplicate Ration Card Apply

Status

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment