8ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை – விண்ணப்ப படிவம் எங்கே? எப்படி நிரப்புவது? முழு தகவல்! | How to Get ₹1000 for Class 8 Students – Step-by-Step | Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, July 29, 2025

8ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை – விண்ணப்ப படிவம் எங்கே? எப்படி நிரப்புவது? முழு தகவல்! | How to Get ₹1000 for Class 8 Students – Step-by-Step | Tech Info

தமிழ்நாடு நலவாரியத்தின் மூலமாக  8 ஆம் வகுப்பு பயிலும் ஆண் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை  claim படிவத்தை எவ்வாறு நிரப்புவதை பற்றி கீழே காண்போம்.

      குறிப்பு:

  1. தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்.
  2. விண்ணப்பத்தினை நீல நிற மையுடைய பேனாவால் நிரப்பவும்.
  3. தமிழில் மட்டுமே நிரப்ப வேண்டும்.ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டாம்.
  4. அடித்தல் திருத்தல் இல்லாமல் நிரப்ப வேண்டும்.

தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுடைய 8ஆம் வகுப்பு படிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூபாய் হ 1000  பெறலாம்.கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பம் கீழே உள்ள லிங்க் ஐ click செய்து  download செய்து கொள்ளலாம்.

  • கல்வி உதவிதொகை  விண்ணப்பத்தில் முதலில் விண்ணப்பிக்கபடும் கல்வி உதவிதொகையின் பெயர் இருக்கும் அதில் குழந்தைகள் பயிலும்  வகுப்பினை குறிப்பிடவும்.அதாவது 8ஆம் வகுப்பு பயில என்பதை குறிப்பிடவும்.
  • அடுத்து  உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர் இருக்கும் அதில் தங்களுடைய நலவாரிய அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாரியத்தின் பெயரை பூர்த்தி செய்யவும் ( உதாரணத்துக்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியம்,சலவை தொழிலாளர் நலவாரியம்).
  • அடுத்ததாக உறுப்பினரின் பெயர் இருக்கும் அதில் குழந்தைகளுடைய பெற்றோர் அதாவது நலவாரிய அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரினை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தந்தை அல்லது கணவர் பெயர் இப்பகுதியில் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுடைய அப்பா அல்லது கணவருடைய  பெயரினை பூர்த்தி செய்ய வேண்டும்.பெண்களாக இருந்தால் கணவனுடைய பெயர்  இல்லை ஆண்களாக இருந்தால் அப்பாவுடைய பெயரினை குறிப்பிட வேண்டும்.
  • அடுத்து விண்ணப்பத்தில் முழு முகவரியில் நலவாரிய cardஇல் இருக்கும் முகவரியை தவறில்லாமல் குறிப்பிட வேண்டும்.
  • பதிவு எண்/நாள் -இதில் நலவாரிய அட்டையில் உள்ள பதிவு எண்ணையும் பக்கத்தில் சின்ன (/ )இட்டு  card பதிவு செய்யப்பட்ட தேதியை நிரப்ப வேண்டும்.
  • குடும்ப அட்டை எண்-இதில் தற்போதுள்ள digital ரேஷன் cardஇல் உள்ள எண்ணை குறிப்பிட வேண்டும் அதாவது digital நம்பர் ரேஷன் card இல் கீழே உள்ள  333 என தொடங்கும்  நம்பர் ஐ குறிப்பிட வேண்டும்.அல்லது www.tnpds.gov.in  இந்த லிங்க் ஐ click செய்து  download பண்ணி  அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும்.
  • ஆதார் எண்-இதில் அட்டையில்  பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினரின் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும் .(குழந்தைகளுடைய ஆதார் எண்ணை பதிவிடக் கூடாது.)
  • தொழிலின் தன்மை-இதில்  வாரியத்தின் பெயரில் என்ன நிரப்பினமோ அதற்கு சார்பான தொழிலை குறிப்பிட வேண்டும்.(உதாரணத்திற்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சுதொழில்... என குறிப்பிட வேண்டும்.) 
  • கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கப்படுகிறது மகன்/மகள் பெயர்- உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை எழுதவும்அல்லது ஆண் குழந்தை இருந்தால்  மகள் ஐ அடித்து விட்டு மகன் பெயரை எழுதவும்.
  • தேர்ச்சிப்பெற்ற/பயிலும் வகுப்பு//பயிலும் வருடம் -இதில் பயிலும் வகுப்பை டிக் செய்து விட்டு விண்ணப்பத்தில் 8ஆம் வகுப்பு என குறிப்பிட வேண்டும்.அடுத்து பயிலும் வருடத்திற்கு கீழ் நடப்பு கல்வி ஆண்டினை குறிப்பிட வேண்டும்.(அதாவது 2025-2026).
  • பதிவுபெற்ற  உறுப்பினரின் கையொப்பம்-பதிவு செய்தவர் கையெழுத்து போட வேண்டும்.இதில் நலவாரிய அட்டையில் கையெழுத்து போட பட்டிருந்தால்; கையெழுத்து போட வேண்டும் இல்லையெனில் கைரேகை வைத்திருந்தால் கைரேகை வைக்க வேண்டும்.
  • அடுத்து இடம் மற்றும் நாள்- தாங்கள்  விண்ணப்பம் பதிவு செய்யும் இடம் மற்றும் விண்ணப்பிக்கும் தேதி ஐ குறிப்பிட வேண்டும்.
  • இறுதியாக தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் seal (முத்திரை)  கண்டிப்பாக தேவை.அதற்கு அருகிலுள்ள நலவாரியத்திற்குச் சென்று பெறலாம்.

DOWNLOAD FORM

 நலவாரிய  சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய  பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர்  விவரங்களை அனுப்பவும்.

இன்னும்  தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும்.

No comments:

Post a Comment