இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000! மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பற்றி தெரியுமா? | How to Apply for PM Internship scheme? | Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, October 24, 2024

இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000! மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பற்றி தெரியுமா? | How to Apply for PM Internship scheme? | Tech Info

இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000! மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பற்றி தெரியுமா?  | How to Apply for PM Internship scheme? | Tech Info?

மத்திய அரசு வேலையில்லாத இளைஞர்களுக்காக புதிய PMIS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 கொடுக்க போவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை பற்றி நாம விரிவாக பாப்போம்!

PMIS திட்டம் என்றால் PRIME MINITERS INTENSHIP SCHEME என்று அர்த்தம். இந்த திட்டத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.5000 கிடைக்க வேண்டும் என்றால் முதலில் இந்த திட்டத்தில் சேர வேண்டும். எப்படி சேர்வது என்றால் கீழே இருக்கும் அப்பளை என்ற பட்டனை கிளிக் செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் ரூ.5000 கிடைக்காது. இதில் சேரும் இளைஞர்களை தேர்வு செய்வார்கள். மேலும் அவர்களுக்கு தினமும் ஒரு பயிற்சி அளிக்கப்படும். ஒரு வருடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் வருகை பதிவேடு செய்வார்கள். இதில் தவறாமல் பங்கேற்கும் அனைவருக்கும் ரூ.5000 வழங்கப்படும்.

இந்த பயிற்சி அளிப்பதற்காக 500 நிறுவனங்கள் இதில் இணைத்துள்ளனர். ஆகையால் நீங்கள் விண்ணப்பம் செய்யும் போது உங்களுக்கு விருப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 5 கம்பெனிக்கு மேல் தேர்வு செய்ய முடியாது.

இதில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மிகபெரிய நிறுவனங்கள் தான். உதாரணமாக  IT  கம்பெனி, ரிலையன்ஸ் கம்பெனி இப்படி பெரிய பெரிய நிறுவனங்கள் தான் இணைந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் அனைவராலும் சேர முடியாது. இதற்கும் தகுதி உள்ளன. என்ன என்ன தகுதி என்று விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணபிக்க தகுதி :

  • வயது தகுதி குறைந்தது 21 வயது முதல் 24 வயது உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆனால் வேலை இல்லாமல் இருத்தல் வேண்டும்.
  • நீங்கள் விண்ணப்பம் செய்ய குறைந்தது 10 ஆம் வகுப்பு முதல் அதிகபட்சம் இளநிலை பட்டதாரியாக இருப்பவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.
  • பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், இன்ஜினியர், ஆடிட்டர் இப்படி மேற்படிப்பு படிப்பவர்கள் யாரும் இதில் விண்ணப்பம் செய்ய முடியாது.
  • நீங்கள் விண்ணப்பம் செய்யும் போது குறைந்தது 1 முதல் அதிகபட்சமாக 5 கம்பெனி வரை தேர்வு செய்து கொள்ள முடியும்.
  • இதில் விண்ணப்பம் செய்ய எந்தவொரு கட்டணமும் நீங்கள் செலுத்த தேவை இல்லை.
  • இதில் தேர்வு ஆகும் இளைஞர்களுக்கு மட்டும் ரூ.5000 மாதந்தோறும் கிடைக்கும். இதில் ரூ.500 பயிற்சி அளிக்கும் நிறுவனத்திடம் இருந்தும் , ரூ.4500 மத்திய அரசிடம் இருந்தும் மொத்தம் ரூ.5000 மாதந்தோறும் கிடைக்கும்.
மேலும் இதை பற்றி கூடுதல் விவரம் அறிய கீழே விளம்பர அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

APPLY NOW 

No comments:

Post a Comment