தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் பட்ட படிப்புக்கு கல்வி உதவி தொகையை பெறலாம்.
அதாவது பட்ட படிப்புக்கு (UG) கல்வி உதவி தொகையாக நலவாரியத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
கல்வி உதவி தொகை பெறுவதற்க்கான விண்ணப்பம் கீழே உள்ள லிங்க் இல் download செய்து பெற்றுக்கொள்ளலாம்.கல்வி உதவி தொகை விண்ணப்பத்தை
எவ்வாறு பூர்த்தி செய்வது என கீழே உள்ள பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிபதற்க்கான தகுதிகள் ?
- பட்டபடிப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள்.
- நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள்.
- கலை மற்றும் அறிவியல் சார்ந்த இளங்கலை பாடப்பிரிவு-Arts and science degree (BA,B.COM,B.SC,BBA,BCA,..etc).
- தொழிற்நுட்ப சார்ந்த இளங்கலை பாடப்பிரிவு(பொறியியல் ,மருத்துவம்,சட்டம்,கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்நுட்ப பாடப்பிரிவுகள்)
- MBBS படிக்கும் மாணவ மாணவியர்கள்.
1.கலை மற்றும் அறிவியல் சார்ந்த இளங்கலை பாடப்பிரிவு
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ 4000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ4000
- இதர வாரியம்-ரூ1500
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ 5000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ5000
- இதர வாரியம்-ரூ1750
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ 4000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ4000
- இதர வாரியம்-ரூ 4000
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ 6000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ6000
- இதர வாரியம்-ரூ6000
- கட்டுமான தொழில் வாரியம் மட்டும்-ரூ5000
- நீல நிற பேனாவை வைத்து எழுத வேண்டும்.
- தமிழில் எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
- அடித்தல்,திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- விண்ணப்பிக்கபடும் கல்வி உதவி தொகையின் பெயர்- உயர் கல்வி பயில என எழுத வேண்டும்.
- உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர்-நலவாரிய அட்டையில் குறிப்பிட்டுள்ள வாரியத்தின் பெயரை குறிப்பிடவும்.(உதாரணமாக கட்டுமான தொழில் வாரியம்,சலவை தொழில் வாரியம்..)
- உறுப்பினரின் பெயர்-நலவாரிய அட்டையில் பதிவு செய்துள்ள உறுப்பினரின் பெயரை குறிப்பிட வேண்டும்.
- தந்தை அல்லது கணவர் பெயர்- நல வாரிய அட்டை உறுப்பினர் பெண்ணாக இருந்தால் கணவர் பெயரையும் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் குறிப்பிட வேண்டும்.
- முழு முகவரி -நலவாரிய அட்டையில் இருக்கும் முகவரியை தவறில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பதிவு எண்/நாள் - நலவாரிய அட்டை பதிவு எண்,அது பக்கத்தில் சின்ன(/) குறியீடு இட்டு அட்டை பதிவு செய்யப்பட்ட தேதியை குறிப்பிட வேண்டும்.
- குடும்ப அட்டை எண்-தற்போது உள்ள digital ரேஷன் card இல் கீழ் உள்ள 333 என தொடங்கும் எண்ணை போடவேண்டும் அல்லது www.tnpds.gov.in இந்த லிங்க் ஐ click செய்து download செய்து அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிடவும்.
- ஆதார்எண்-நலவாரிய அட்டை உறுப்பினரின் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.குழந்தையின் ஆதார் எண்ணை குறிப்பிட கூடாது.
- தொழிலின் தன்மை- வாரியத்தின் பெயரில் எந்த பெயரை குறிப்பிட்டமோ அந்த வாரியத்தின் தொடர்பான தொழிலை போடவேண்டும்.(உதாரணத்துக்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்.தச்சு தொழில்... )
- கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் பெயர்- தங்கள் மகனுக்காக விண்ணப்பித்தால் மகள் ஐ அடித்து மகன் பெயரை குறிப்பட வேண்டும்.இல்லை எனில் மகளுக்காக விண்ணப்பித்தால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை போட வேண்டும்.
- தேர்ச்சிபெற்ற /பயிலும் வகுப்பு/பயின்ற ஆண்டு-தேர்ச்சி பெற்ற என்பதை டிக் செய்து விட்டு பட்டபடிப்பு பிரிவினை குறிப்பிட வேண்டும் உதாரணத்துக்கு BSC ,BA,BE,MBBS, என குறிப்பிட்டால் போதுமானது.B.SC CS,BA Tamil,BE ECS என குறிப்பிட அவசியமில்லை.மற்றும் பட்டபடிப்பு பயிலும் வருடத்தை அதாவது BSC முதலாமாண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும்,நடப்பு கல்வி ஆண்டையும் 2025-2026 என குறிப்பிட வேண்டும்.
- உறுப்பினரின் கையொப்பம் - நலவாரிய அட்டையில் உறுப்பினர் கையெழுத்து போடப்பட்டிருந்தால் கையெழுத்து போடவேண்டும் அல்லது கை ரேகை வைத்திருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.
- இடம் மற்றும் நாள் - விண்ணப்பம் பதிவு செய்யும் இடம் மற்றும் அன்றைய தேதியை குறிப்பிட வேண்டும்.
- தொழிற்சங்கதினுடைய கையெழுத்து மற்றும் முத்திரை(seal)- கண்டிப்பாக தேவை.அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று வாங்கி கொள்ளவும்.
DOWNLOAD FORM
- தொடர்புக்கு:
- மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
- இன்னும் தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும்.
- https://bit.ly/4mqyVnq
No comments:
Post a Comment