ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி கவலை வேண்டாம்!
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க,ரேஷன் கார்டு பெயர் சேர்க்க,நீக்க போன்ற பல்வேறு பொதுவிநியோக திட்ட குறைகளை தீர்க்க அந்ததந்த மாவட்டங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.
சிறப்பு முகாம்
குடும்ப அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் இனி அட்டையில் உள்ள குறைகளை சரி செய்வதற்கு அலையை வேண்டாம்.அந்தந்த மாவட்டகளின் கீழ் உள்ள முகாம்களில் சரி செய்து கொள்ளலாம்.அரசு ரேஷன் கார்டு மற்றும் பொது விநியோக குறைகளை தீர்க்க,நம் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் சிறப்பு குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது.இந்த தகவல் தொடர்பான அறிவிப்பானது அந்ததந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் கீழ் தகவல் வெளியாகும்.இந்த ஆகஸ்ட் மாதம் 2025 இல் இம்முகாம் நடைபெற உள்ளன.காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
முகாமில் என்னென குறைகளை சரி செய்யலாம் ?
- புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க
- பெயர் திருத்தம்
- முகவரி திருத்தம்
- உறுப்பினர் சேர்த்தல்/நீக்குதல்
- குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம்
- பொதுவிநியோகதிட்ட குறைகளை தெரிவிக்கலாம்.
நடைபெறும் இடங்கள்
தற்போது தூத்துக்குடி,திருப்பத்தூர்,திருச்சி ஆகிய மூன்று மாவட்டகளில் 09/08/2025 சனிக்கிழமை அன்று குறைதீர் சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன.மற்ற மாவட்ட பொதுமக்கள் அவர்களுடைய தாலுகா அலுவலகத்தில் 9ஆம் தேதி அன்று முகாம் நடைபெறுகிறதா என அறிந்த பின் செல்லவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment