தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்களுக்காக இப்பதிவு
தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய 9ஆம் வகுப்பு பயிலும் மகன் அல்லது மகளுக்காக கல்வி உதவி தொகை பெறலாம்.
அதாவது தமிழ்நாடு நலவாரிய மையத்திலிருந்து 9ஆம் வகுப்பு பயிலும் ஆண்,பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ1000 வழங்கப்பட்டு வருகிறது.அக்கல்விஉதவி தொகையை பெறுவதற்கு கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்க்கான வழிமுறைகள் இப்பதிவில் தெளிவாக கொடுக்கபட்டுள்ளன.கல்வி உதவி தொகை விண்ணப்பத்தை download செய்வதர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவிற்கு தகுதி உடையவர்கள்:
- நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள்.
- குழந்தை 9ஆம் வகுப்பு பயில வேண்டும்.
- ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.
கவனிக்க வேண்டியவை:
- விண்ணப்பத்தில் நீல நிற பேனாவை பயன்படுத்த வேண்டும்.
- தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
- அடித்தல் திருத்தல் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்க்கான வழிமுறைகள்:
- விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின் பெயர்-குழந்தைகள் பயிலும் வகுப்பை குறிப்பிட வேண்டும் அதாவது 9ஆம் வகப்பு பயில என்பதை நிரப்ப வேண்டும்.
- உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர் - தங்கள் நலவாரிய அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாரியத்தின் பெயரை பதிவிட வேண்டும். (உதாரணத்துக்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியம்,சலவை தொழிலாளர் நலவாரியம்).
- உறுப்பினரின் பெயர் -குழந்தைகளுடைய பெற்றோர் அதவது நலவாரிய அட்டையில் குறிப்பிட பட்டிருக்கும் உறுப்பினரின் பெயரை பூர்த்தி செய்யவும்
- தந்தை அல்லது கணவர் பெயர்-அட்டை வைத்திருப்பவர்கள் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் பெண்ணாக இருந்தால் கணவனுடைய பெயரையும் நிரப்ப வேண்டும்.
- முழு முகவரி - நலவாரிய card இல் இருக்கும் முகவரியை தவறில்லாமல் எழுத வேண்டும்.
- பதிவு எண் / நாள் - நலவாரிய அட்டையின் பதிவு எண்ணையும் சின்ன (/) இட்டுஅட்டை பதிவு செய்த தேதியையும் குறிப்பிடவும்.
- குடும்ப அட்டை எண்- தற்போது உள்ள digital ரேஷன் card இல் கீழ் உள்ள 333 என தொடங்கும் எண்ணை போடவேண்டும் அல்லது www.tnpds.gov.in இந்த லிங்க் ஐ click செய்து download செய்து அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிடவும்.
- ஆதார் எண்- நலவாரிய அட்டையில் பதிவுசெய்துள்ள உறுப்பினரின் ஆதார் எண்ணை குறிப்பிடவும் குழந்தையின் ஆதார் எண்ணை குறிப்பிட கூடாது.
- தொழிலின் தன்மை- வாரியத்தின் பெயரில் எந்த பெயரை குறிப்பிட்டமோ அந்த வாரியத்தின் தொடர்பான தொழிலை போடவேண்டும்.(உதாரணத்துக்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்.தச்சு தொழில்... )
- கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் பெயர்- தங்கள் மகனுக்காக விண்ணப்பித்தால் மகள் ஐ அடித்து மகன பெயரை குறிப்பட வேண்டும்.இல்லை எனில் மகளுக்காக விண்ணப்பித்தால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை போட வேண்டும்.
- தேர்ச்சிபெற்ற /பயிலும் வகுப்பு/பயின்ற ஆண்டு-பயிலும் வகுப்பை டிக் செய்து விட்டு 9 ஆம் வகுப்பு என குறிப்பிட வேண்டும் மற்றும் நடப்பு கல்வி ஆண்டு அதாவது 2025-2026 என குறிப்பிட வேண்டும்.
- உறுப்பினரின் கையொப்பம் - நலவாரிய அட்டையில் உறுப்பினர் கையெழுத்து போடப்பட்டிருந்தால் கையெழுத்து போடவேண்டும் அல்லது கை ரேகை வைத்திருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.
- இடம் மற்றும் நாள் - விண்ணப்பம் பதிவு செய்யும் இடம் மற்றும் அன்றைய தேதியை குறிப்பிட வேண்டும்.
- தொழிற்சங்கதினுடைய கையெழுத்து மற்றும் முத்திரை(seal)- கண்டிப்பாக தேவை.அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று வாங்கி கொள்ளவும்.
DOWNLOAD
- தொடர்புக்கு:
- மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
- இன்னும் தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும்.
- http://bit.ly/4lT8vKW
No comments:
Post a Comment