ITI/Polytechnic மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பம் – யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி எழுதலாம்? | Educational Assistance up to ₹4000 for Diploma Students – Full Application Guide!|Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, August 7, 2025

ITI/Polytechnic மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பம் – யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி எழுதலாம்? | Educational Assistance up to ₹4000 for Diploma Students – Full Application Guide!|Tech Info

  தமிழக அரசின் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்களது மகன் அல்லது மகள் ITI அல்லது பாலிடெக்னிக் போன்ற டிப்ளமோ course படித்தால் கல்வி உதவி தொகை பெறலாம்.     

அதாவது polytechnic,ITI டிப்ளமோ பயில்வதற்கு தமிழக அரசிடமிருந்து  நலவாரிய திட்டத்தின் கீழ் நலவாரிய அட்டை வைத்திருப்போர் விண்ணபிப்பதன் மூலம்  கல்வி உதவி தொகையை வழங்கி வருகிறது.விண்ணப்பத்தினை பெற கீழே உள்ள download form என்பதை click செய்து download செய்து கொள்ளலாம்.விண்ணப்பிபதின் வழிமுறைகளை இப்பதிவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிபதற்க்கான தகுதிகள்:

  • நலவாரிய அட்டை வைத்திருக்கும் உறுப்பினர்கள்
  • polytechnic,ITI போன்ற டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவியர்கள்.
நலவாரிய மைய வாரியத்தின் கீழ் தமிழக அரசு diplomo பயிலும் மாணவ மாணவியருக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள்:

polytechnic,ITI டிப்ளமோ பயிலும் மாணவ மாணவியர்கள் :
  • கட்டுமான தொழில் வாரியம்-ரூ 3000
  • கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ3000
  • இதர வாரியம்-ரூ 1000
 டிப்ளமோ விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு:
  • கட்டுமான தொழிலாளர் நல வாரியம் -ரூ 4000
  • கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ4000
  • இதர வாரியம்-ரூ1200
விண்ணப்ப பதிவில் நினைவில் கொள்ள வேண்டியவை:
  • தமிழில் எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
  • நீல நிற பேனாவில் மட்டுமே எழுத வேண்டும்.
  • அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். 
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டிய படிநிலைகள்:
  1. விண்ணப்பிக்கபடும் கல்வி உதவி தொகையின் பெயர்-  கல்வி  பயில என எழுத வேண்டும்.
  2. உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர்-நலவாரிய அட்டையில் குறிப்பிட்டுள்ள வாரியத்தின் பெயரை குறிப்பிடவும்.(உதாரணமாக கட்டுமான தொழில் வாரியம்,சலவை தொழில் வாரியம்..)
  3. உறுப்பினரின் பெயர்-நலவாரிய அட்டையில் பதிவு செய்துள்ள உறுப்பினரின் பெயரை குறிப்பிட வேண்டும்.
  4. தந்தை அல்லது கணவர் பெயர்- நல வாரிய அட்டை உறுப்பினர் பெண்ணாக இருந்தால் கணவர் பெயரையும் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் குறிப்பிட வேண்டும்.
  5. முழு முகவரி -நலவாரிய அட்டையில் இருக்கும் முகவரியை தவறில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  6. பதிவு எண்/நாள் - நலவாரிய அட்டை பதிவு எண்,அது பக்கத்தில் சின்ன(/) குறியீடு இட்டு அட்டை பதிவு செய்யப்பட்ட தேதியை குறிப்பிட வேண்டும்.
  7. குடும்ப அட்டை எண்-தற்போது உள்ள  digital ரேஷன் card இல் கீழ் உள்ள  333 என தொடங்கும் எண்ணை போடவேண்டும் அல்லது www.tnpds.gov.in  இந்த லிங்க் ஐ click செய்து download செய்து அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிடவும்.
  8. ஆதார்எண்-நலவாரிய அட்டை உறுப்பினரின் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.குழந்தையின் ஆதார் எண்ணை குறிப்பிட கூடாது.
  9. தொழிலின் தன்மை- வாரியத்தின் பெயரில் எந்த பெயரை குறிப்பிட்டமோ அந்த வாரியத்தின் தொடர்பான தொழிலை போடவேண்டும்.(உதாரணத்துக்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்.தச்சு தொழில்...)
  10. கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் பெயர்தங்கள் மகனுக்காக விண்ணப்பித்தால் மகள் ஐ அடித்து மகன் பெயரை குறிப்பட வேண்டும்.இல்லை எனில் மகளுக்காக விண்ணப்பித்தால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை  போட வேண்டும்.
  11. தேர்ச்சிபெற்ற /பயிலும் வகுப்பு/பயின்ற ஆண்டு-தேர்ச்சி  பெற்ற என்பதை டிக் செய்து விட்டு  பிரிவினை  குறிப்பிட வேண்டும்  உதாரணத்துக்கு  என குறிப்பிட்டால் போதுமானது.என குறிப்பிட அவசியமில்லை.மற்றும்  பயிலும் வருடத்தை அதாவது உதாரணத்துக்கு   முதலாமாண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும்,நடப்பு கல்வி ஆண்டையும்  2025-2026 என குறிப்பிட வேண்டும்.
  12. உறுப்பினரின் கையொப்பம் - நலவாரிய அட்டையில்  உறுப்பினர் கையெழுத்து போடப்பட்டிருந்தால்  கையெழுத்து போடவேண்டும் அல்லது கை ரேகை  வைத்திருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.
  13. இடம் மற்றும் நாள் - விண்ணப்பம் பதிவு செய்யும் இடம்  மற்றும் அன்றைய தேதியை  குறிப்பிட வேண்டும்.
  14. தொழிற்சங்கதினுடைய கையெழுத்து மற்றும் முத்திரை(seal)- கண்டிப்பாக தேவை.அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு  சென்று வாங்கி கொள்ளவும்.
  15.                                                               

    DOWNLOAD FORM

      தொடர்புக்கு:
      1.       மேலும் தகவல் பற்றி அறிய  அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய  பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர்  விவரங்களை அனுப்பவும்.
      2. இன்னும்  தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும்.
      3. http://bit.ly/45fcIl2







No comments:

Post a Comment