இன்னைக்கு நம்ம பேஜ் ல பாக்கபோற தகவல் என்னன்னா கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்று ஏன் சொல்கிறார்கள் . அந்த பழமொழிக்கான விளக்கம் தான் பாக்க போறோம் ,வாங்க பார்க்கலாம்.
- கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ஏன் அப்படி சொல்கிறார்கள் நாம் இப்பொழுது இருக்கும்,வசிக்கும் வீடுகள் அனைத்தும் செங்கல் சிமென்ட் கல்கள் கொண்டு கட்டப்பட்டவை அதை துளைக்க வேண்டும் என்பது கஷ்டமான காரியம் அல்லவா.ஆனால் பழைய காலங்களில் உள்ள வீடுகள் கட்டிடங்கள் அனைத்தும் மணல் மூலம் உருவாக்கப்பட்டவை இதை நாம் அறிந்திருப்போம் ஏன் பார்த்தும் இருப்போம்.
- அவ்வாறு அப்போ உள்ள இந்த மணல் வீடுகளில் திருடுவதற்கு வருகிற திருடன் எவ்வாறு திருடுவது மணல்தான் அல்லவே வீடு அதனால் மணலை துளைதுகொண்டே வருவான்.அவ்வாறு துளைபதற்கு பெயர்தான் கன்னம் வைப்பது என்கிறார்கள் பழைய ஆட்கள்.
- இப்பொழுது என்ன தெரிய வருகிறது கன்னம் வைப்பது என்பது திருடுவது. திருடுவது என்பதுதான் அதனுடைய பொருள் ஆகவே தான் பழமொழி நமக்கு சொல்கிறது கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்று.
- பொருள்: நாம் கப்பலுக்கே முதலாளியாய் இருக்கும் பொழுது அக்கப்பல் கடலில் கவிழ்ந்தனவே என்று திருடும் எண்ணத்திற்கு போய் விடக்கூடாது.மறுகணமே மீண்டும் உழைக்க வேண்டும் என்ற மனதை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பொருளை கொண்டுள்ளது அப்பழமொழி.
- நண்பர்களே இன்று நம்ம பேஜ்ல பாத்த. தகவல் நன்மை உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் மீண்டும் ஒரு நன்மை மிக்க பழமொழிகளுடன் இன்னொரு தகவலில் சந்திக்கிறேன் நண்பர்களே.
- மேலும் அப்பழமொழி குறித்து வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கிழே உள்ள வீடியோ வை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.
நன்றி!
No comments:
Post a Comment