தமிழக அரசு,அரசு ஊழியர்களுக்கு 5 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 9 ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது என்பது தெரியும்.
அதேபோல் மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசும் 5 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தியது,அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 12 விழுக்காடு அகவிலைப்படியை கொடுத்து வந்த நிலையில் மேலும் 5 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி மொத்தம் 17 விழுக்காடு அகவிலைப்படியை கொடுத்து வருகிறது.
மத்திய அரசுக்கு இணையாக இப்பொழுது தமிழக அரசும், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய 12 விழுக்காடு அகவிலைப்படியுடன் இப்பொழுது உயர்த்தப்பட்ட ஐந்து விழுக்காடு அகவிலைப்படியையும் சேர்த்து மொத்தம் 17 விழுக்காடு அகவிலைப்படியை ஜூலை , ஆகஸ்ட்,செப்டம்பர் மாததிக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
இந்த வருடம் தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழக அரசு ஊழியர்களுக்கும் மிகவும் சிறப்புள்ளதான தீபாவளியாக அமையகூடும்.
மத்திய அரசின் இந்த முடிவால் 50லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65லட்சம் ஓய்வு ஊதியர்களும் சேர்த்து கூடுதலாக ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளது தெரியும். அதேபோல் தமிழக அரசுக்கும் இந்த அகவிலைப்படி உயர்த்துவதால் தமிழக அரசுக்கு எவ்வளவு கோடி தொகை கூடுதலாக செலவாகும் என்பது அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment