மதுரை அருகே உசிலம்பட்டியில் குளிக்கச் சென்ற மாணவிையை இரண்டு நபர்கள் பலாத்காரம் செய்தும்,கொலை செய்தும் வந்த செய்தியினால் உசிலம்பட்டி வட்டார பகுதி மக்கள் நடுங்கி போயிருக்கிறார்கள்.
உசிலம்பட்டியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி அருகிலுள்ள சேடப்பட்டி கிராமத்திற்கு தனது பாட்டியின் ஊர் என்பதால் அங்கு திருவிழா காண குடும்பத்துடன் சென்று இருக்கிறார்கள். திருவிழா முடிந்த பின்பு மாணவியின் குடும்பத்தார்கள் அனைவரும் திரும்பிய நிலையில் மாணவி மட்டும் பாட்டியுடன் இருந்திருக்கிறார்.
சம்பவத்தன்று குளிப்பதற்காக மாணவி தோட்டத்திற்கு சென்று இருக்கிறார்.குளிக்கப்போன மாணவி வெகுநேரமாகியும் வரவில்லை எனவே பக்கத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் அனைவரும் தேடிய நிலையில் உள்ளனர்.அலைந்து தேடிய பின்பு மலை அடிவாரத்தின் கீழ் மாணவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து உறவினர்களும் ஊர் மக்களும் நடுநடுங்கிப் போய் மிகவும் கவலையுடனும் ஆத்திரத்துடன் இருந்திருக்கின்றார்கள்.
இந்த செய்தியை அறிந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த விசாரணையில் அந்த மாணவி கடுமையாக கற்பழிக்கப் பட்டிருக்கிறாள் இரண்டு நபர்களால் என்பதை அறிந்து ஊர் மக்கள் பீதியில் உள்ளனர்.
அதே சேடப்பட்டி ஊரில் இரட்டையர் களான இரண்டு நபர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டிற்கு தண்ணீர் பிடிப் பதற்காக இந்த மாணவி அடிக்கடி சென்றுள்ளார்.இந்த மாணவியை பார்த்த அந்த இரட்டையர்கள் காதல் வசப்பட்டு துன்புறுத்திருகிறார்கள் .அந்த மாணவி இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தனியாக குளிக்க சென்ற மாணவியை யாரும் இல்லாத நிலையில் இந்த இரட்டையர்கள் பயங்கர கொடூரமாகத் தாக்கி அந்த மாணவியை பலாத்காரம் செய்தும் கொலை செய்தும் உள்ளனர்.
இந்த விசாரணையில் உடனடியாக குற்றவாளியை கண்டுப்பிடித்த காவல்துறையினருக்கு ஊர்மக்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment