நீங்க தங்க வாங்க போறீங்களா?? அப்போ கண்டிப்பா இந்த விஷயத்தை தெரிஞ்சிகோங்க..
இனிமே தங்கம் வாங்கும் போது அதில் HUID ஆறு நம்பர் இருக்கா என்று பாருங்க.. அப்படி இருந்தால் மட்டும் வாங்குங்க இல்லேன்னா வாங்காதீங்க!
ஏனா இந்திய அரசு ஏப்ரல் ஓன்று முதல் புதிய சட்டம் அமல் படுத்தி இருக்கிறது. இதில் தங்கம் விற்பனை செய்பவர்கள் கட்டாயம் அந்த தங்கத்தில் இந்த HUID நம்பர் குறிப்பிட பட்டு இருக்க வேண்டும் என்று சொல்லிருகிறது.. அப்படி இருந்தால் மட்டுமே அது இந்திய அரசால் ஆங்கிகாரம் உள்ள தரமான தங்கம் என சான்று அழைக்கபடுகிறது. இப்படி HUID நம்பர் எதுவும் இல்லாமல் இருந்தால் அதுவும் தரமான தங்கம் இல்லை என சான்று அழைக்கப்படும் என இந்திய அரசு சொல்லிருகிறது.
எனவே அனைவரும் தங்கம் வாங்கும் முன் இந்த HUID (ஹால்மார் தனிப்பட்ட அடையாளம்) நம்பர் இருக்கிறதா என பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே தங்கம் வாங்க வேண்டும்.இல்லை என்றால் வாங்க வேண்டாம். அந்த HUID நம்பர் வைத்து வாடிக்கையாளர் என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று மொபைல் அப்ப்ளிகேசனை தரவிறக்கம் செய்துவிட்டு அதை ஓபன் செய்ய வேண்டும்.
பின்பு அதில் verify HUID ன்னு இருக்கும் அதை கிளிக் செய்தால் தங்கத்தில் இருக்கம் HUID நம்பர் கொடுக்க சொல்லும் அதை இங்கு டைப் செய்தால் போதும் நீங்க வாங்க கூடிய தங்கம் தரமானதா? போலியானதா? விற்பனை செய்யும் கடையின் முகவரி, பெயர், தங்கத்தின் பெயர், என அனைத்தும் இதில் இருக்கும். இப்படி HUID நம்பர் வைத்து நாம் இதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
இனி மேலாவது தங்கம் வாங்குமுன் இதை பார்த்துவிட்டு வாங்குங்க. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
No comments:
Post a Comment