ரேஷன்கார்டு இல்லாமல் எந்த ஒருஅரசு சலுகையும் கிடைகாது! என்பது எல்லோருக்கும் தெரியும் .அதனால் ரேஷன்கார்டு இல்லாமல் யாரும் இருக்கமாட்டார்கள் .அப்படிப்பட்ட ரேஷன்கார்டு இல்லாதவர்கள் எப்படி ரேஷன்கார்டு வாங்கலாம் என்பதை பார்க்கலாம் .
தேவையான ஆவணங்கள் :
- வீட்டு ரசிது
- ஆதார்
- கேஸ் புக்
- பிறப்பு சான்றிதழ் / ஆதார்
- திருமண பத்திரிக்கை
- குடும்ப தலைவர் போட்டோ
- குடும்ப உறுப்பினர் நீக்கிய நீக்கல் சான்று
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் கீழே உள்ள "New Card Apply" என்ற இணைதளத்திற்கு போக வேண்டும் . அதில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- குடும்ப தலைவர் விவரங்களை இடது புறம் ஆங்கிலத்தில் டைப் பண்ணவேண்டும் .
- குடும்ப தலைவர் விவரங்களை வலது புறத்தில் தமிழில் டைப் பண்ணவேண்டும் .
- பிறகு யாரு குடும்ப தலைவரோ அவங்க போட்டோ -வை பதிவிறக்கம் செய்யவேண்டும் .
- அதுக்கு அப்புறம் கீழே உங்களுடைய மாவட்டம் ,வட்டம் ,கிராமம் ,தேர்வு பண்ணிட்டு உங்களுடைய பின் கோடை டைப் பண்ண வேண்டும் .
- உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும் .அந்த எண் தான் ரேசன்கார்ட்-க்கு லிங்க் ஆகும் .
- பிறகு உறுப்பினர் சேர்க்கை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- பிறந்த தேதி ,பாலினம் ,தேசிய இனம் ,தொழில் ,மாத வருமானம் ,ஆகிவற்றை டைப் பண்ணவேண்டும் .\
- ஆதார் கார்டு ,திருமண பத்திரிக்கை ,நீக்கல் சான்று ,எல்லாவற்றையும் ஒரே file -லாக அட்டாச்சு பண்ணி upload செய்யவேண்டும் .
- பிறகு அவங்களுடைய ஆதார் நம்பரை டைப் பண்ணவேண்டும் .
- பிறகு உறுப்பினர் விவரம் சேமிக்க என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- பிறகு கீழே அவங்களுடைய விவரம் கீழே இருக்கும் .அதில் ஏதேனும் தவறு இருந்துச்சுனா திருத்த என்ற பட்டனை கிளிக் செய்து திருத்தம் செய்துக்கலாம் .
- பிறகு மறுபடியும் உறுப்பினர் சேர்க்கை என்ற பட்டனை கிளிக் செய்யணும் .
- அவங்களுடைய பெயர் முதலில் ஆங்கிலத்தில் டைப் பண்ணவேண்டும் ,பிறகு தமிழில் டைப் பண்ணவேண்டும் .பிறந்த தேதி ,பாலினம் select பண்ணவேண்டும் .பிறகு உறவு முறையை select பண்ணவேண்டும் .
- இவங்களுக்கும் ஆதார் கார்டு ,திருமண பத்திரிக்கை ,நீக்கல் சான்று ,எல்லாவற்றையும் ஒரே file -லாக அட்டாச்சு பண்ணி upload செய்யவேண்டும்.
- பிறகு மறுபடியும் உறுப்பினர் சேர்க்கை என்ற பட்டனை கிளிக் செய்யணும் .
- பிறகு குழந்தை இருந்தால் இதை போல் டைப் பண்ணவேண்டும் .அவங்களுடைய ஆதார் ,பிறந்த certificate upload செய்யவேண்டும் .
- பிறகு உங்களுக்கு பிடித்த கார்டை select பண்ண வேண்டும் .குடியிருப்பு சான்று UPLOAD பண்ணவேண்டும் .எரி வாய்வு இருந்துச்சுன அதை SELECT பண்ணிட்டு அவங்களுடைய Details கொடுக்கவேண்டும் .அதை சரிபார்த்து பதிவு செய் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .ப
- பிறகு எல்லாவற்றையும் சரியா இருக்குதா என்று செக் பண்ணிட்டு உறுதிப்படுத்த என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு ஒரு குறிப்பு எண் வரும் .அதை வைத்து ரேசன்கார்டின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
New Card Apply
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment