பெரும்பாலும் நாம் வீட்டுக்கு கரண்ட் பில் GPAY , PONEPE, PAYTEM மூலமாக தான் செலுத்தி வருகிறோம். நீங்களும் அப்படி செலுத்தி வந்தால் இப்போ சொல்ற்றதையும் தெரிஞ்சிகோங்க..
ஏனா பெரும்பாலும் இப்படி கரண்ட் பில் கட்டும் போது நமக்கு பில் அல்லது ரசீது கிடைப்பது இல்லை. ஆனால் இந்த ரசீதை நீங்கள் ஆன்லைனில் எடுத்து கொள்ளலாம் இப்படி ஒரு வசதி நமது TNEB இணையதளத்தில் இருக்கிறது இதை பற்றி தெரியுமா? தெரியலனா இதை முழுசா படிச்சு தெரிஞ்சிகோங்க..
நீங்க ஆன்லைனில் எங்க வேண்டுமானாலும் கரண்ட் பில் கட்டி இருந்தாலும் மிக எளிதாக ஒரே நொடியில் எடுத்து கொள்ளலாம். அதுவும் ஒர்ஜினல் ரசீது! எப்படி தெரியுமா??
வழிமுறை 1 :
- முதலில் https://bit.ly/tnereceiptdownload இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க..
- இப்போ உங்களுடைய EB நம்பர், இரசீது நம்பர், பில் கட்டிய தேதி இவற்றை எல்லாம் கொடுத்து விட்டு கீழே இருக்கும் VIEW / DOWNLOAD என்ற லிங்கை கிளிக் பண்ணுங்க.
- அவ்வளவு தான் உங்களுக்கு ஒரிஜினல் EB பில் கிடைத்துவிடும்..
- உங்களுக்கு ரசீது எண், ரசீது தேதி தெரியவில்லை என்றால் https://bit.ly/EBBillStatus இந்த லிங்கில் சென்று உங்களுடைய EB நம்பர் கொடுத்தால் போதும்! ரசீது எண், ரசீது தேதி பார்த்து தெரிந்து கொள்ளலாம்..
வழிமுறை 2 :
- வேற வழி மூலம் ரசீது எடுக்க விரும்பினால் https://bit.ly/tneblogin இந்த லிங்கில் சென்று உங்களுக்கு என ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.
- பின் இந்த இணையதளத்தில் லாகின் பண்ணிட்டு மேலே இருக்கும் e-Receipt /Achieve ன்னு இருக்கிறதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களுடைய EB நம்பர் கொடுத்து விட்டு SUBMIT செய்யுங்கள்
- இப்போ நீங்கள் ஏற்கனவே கட்டிய பில் அனைத்தும் கீழே வந்துவிடும்.
- இதில் உங்களுக்கு தேவையான ரசீதை எடுக்க வேண்டுமானால் அந்த பில் தொகைக்கு நேராக இருக்கும் search பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- அவ்வளவு தான் உங்களுக்கு ஒரிஜினல் EB பில் கிடைத்துவிடும்..
இனி கவலை வேண்டாம் இந்த இரசீதை நீங்க எப்ப வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்..
No comments:
Post a Comment