தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்ப்பதற்காகவே முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் உங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்கும். இதை வைத்து நீங்கள் ரூ.5லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்து கொள்ளலாம். அதுவும் தனியார் மருத்துவமனையில்!
இந்த திட்டத்தின் மூலம் நீங்களும் பயன்பெற விருப்பமா? அப்போ! எப்படி விண்ணபிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..
- நீங்கள் முதலில் கீழே இருக்கும் லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- பின்பு அதை நிரப்பிவிட்டு உங்கள் ஊரில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்கி கொள்ளுங்கள்.
- உங்கள் பெயரில் வருமான சான்றிதழையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- இதனுடன் சேர்த்து உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஆதார், ரேஷன்கார்டு, போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- உங்கள் மாவட்டத்தில் இருக்கும் கலக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
- விண்ணப்பம் செய்து முடித்தவுடன் உங்களுக்கு ஒரு நம்பர் கொடுப்பார்கள். அதை நீங்கள் குறித்து வைத்து கொள்ளுங்கள்.
- இப்போது https://claim.cmchistn.com/E-Card என்ற வலைதளத்திற்கு சென்று அந்த நம்பரை கொடுத்து search செய்தால் உங்களது தகவல் வரும்.
- இதில் குடும்ப உறுப்பினரின் பெயர் அனைத்தும் இருக்கிறதா? போட்டோ தெரிகிறதா? பெயர் திருத்தும் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளுங்கள்.
- இதில் ஏதும் தவறு இருப்பின் மறுபடியும் கலக்டர் அலுவலகத்திற்கு சென்று திருத்தம் செய்து கொள்ளுங்கள்.
- சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் E-GENERATE CARD இருக்கும் பட்டனை கிளிக் செய்து மருத்துவ காப்பீடு அட்டையை தரவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- உங்கள் பகுதியில் உள்ள எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு அட்டை செல்லுபடி ஆகும் என்பதை கீழே உள்ள Check Hospital என்ற பட்டனைக் கிளிக் செய்து பார்க்க.
- எந்தெந்த நோய்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்து மருத்துவம் செய்ய இயலும் என்பதை கீழே உள்ள Check Traetment என்ற பட்டனைக் கிளிக் செய்து பார்க்க
No comments:
Post a Comment