உங்க பிள்ளைகளுக்கு திருமணம் ஆயிருச்சா, ரேஷன்கார்டில் உங்க பிள்ளைகள் பெயர் இருக்கா? ,அந்த பெயரை உங்க ரேஷன்கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் தான் உங்க பிள்ளைகளுக்கு ரேஷன்கார்டு வாங்க முடியும் .ஆதலால் ரேஷன்கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யுங்க . .ரேஷன்கார்டில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்கள் பெயரையும் நீக்க வேண்டும் .எப்படி பெயரை நீக்குவது என்று தெரியவில்லையா ? மொபைல் மூலமாவே ரேஷன் கார்டில் இருந்து பெயரை ரொம்பவே ஈஸியா Remove பண்ணலாம் ! கீழே பாருக்கலாம் .
திருமணம் முடித்துவிட்டது பெயர் நீக்கம் செய்வதற்கான ஆவணங்கள் :
- திருமணப் பத்திரிக்கை
- ஆதார்
- வீட்டுவரி ரசிது
இறந்ததற்குக்கான ஆவணங்கள் :
- இறப்புச் சான்றிதழ்
வழிமுறை :
- முதலில் நீங்க https://www.tnpds.gov.in/ இந்த லிங்கில் போய் கிளிக் பண்ணவேண்டும் .
- பிறகு பயனாளர் உள்நுழைவு என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் மொபைல் நம்பர் கேட்கும் .அதில் ரேஷன்கார்டுக்கு கொடுத்த மொபைல் நம்பர் டைப் பண்ணவேண்டும் .
- பிறகு கேப்சாவை டைப் பண்ணி sent OTP கொடுக்கவேண்டும் .
- உங்க மொபைலுக்கு ஒரு OTP வந்துருக்கும் .அந்த OTP போட்டுsubmit என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- பிறகு ஒரு பேஜ் ஓபன் ஆகும் . அதில் அட்டைபிறழ்வுகள் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு புதிய கோரிக்கை என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் தேர்ந்தெடுக்கவும் என்ற ஆப்சன் இருக்கும் .
- அதில் குடும்ப உறுப்பினர் நீக்க என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அதில் திருமணம் ஆயிருசுனா திருமண பத்திரிக்கை வீட்டு வரி ரசிது சேர்த்து upload செய்யவேண்டும் .
- இதுவே இறந்தால் இறப்பு சான்றிதல் upload செய்ய வேண்டும்
- எதற்காக பெயரை நீக்குறோம் என்று காரணத்தை டைப் பண்ணவேண்டும் .
- யாரு பெயரை நீக்குறோமோ அந்த பெயரை select பண்ணிட்டு கீழே ஒரு சின்ன பாக்சை கிளிக் செய்து பதிவு செய்ய என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு ஒரு டைம் செக் பண்ணிட்டு பதிவு செய்ய என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அவ்வளவுதான் குறிப்பு எண் என்ற நம்பர் வரும் அந்த நம்பரை வைத்து நாம் ஸ்டேட்டஸ் செக் பண்ணிக்கலாம் .
- முகப்பு செல்க என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .அதில் அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அதில் குறிப்பு எண் என்ற நம்பரை டைப் பண்ணி பதிவு செய்ய என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .அவ்வளவு தான் இப்படி Status செக் பண்ணிக்கலாம் .
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment