இலவச தையல் இயந்திரம் பெற ! இங்க பாருங்க ! | How to apply for free sewing machine? | TechInfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Saturday, August 19, 2023

இலவச தையல் இயந்திரம் பெற ! இங்க பாருங்க ! | How to apply for free sewing machine? | TechInfo


உங்களுக்கு தையல் தெரியுமா ? தையல் படித்ததற்கான சான்றிதழ் வச்சுருக்கிங்களா? தமிழக அரசு பெண்களின் சுயத்தொழில்  வளர்சிக்காக  சத்தியவாணி அம்மையார் நினைவு தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மூலமாக  தையல் படித்த பெண்களுக்காக இலவச தையல் இயந்திரம்  வழங்கி வருகிறது . இந்த இலவச தையல் இயந்திரம் பெற அருகில் உள்ள  இ -சேவை மையம் மூலமாகவே விண்ணபிக்கலாம் . அதை பற்றிய முழு விவரத்தை பார்க்கலாம்! 

விண்ணபிப்பதற்கான தகுதிகள் : 
  • விண்ணப்பதாரர் 20 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .அதிக பட்ச வயது வரம்பு 40. 
  • குறைந்தது  6 மாத கால தையல் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் .
  • மாத வருமானம் 12000-திற்கு  மிகாமல் இருக்க வேண்டும் .
  • ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் , பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ,மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதியானவர்கள். 
 விண்ணபிப்பதற்கு  தேவையான ஆவணங்கள் :
  • பாஸ் போர்ட் சைஸ் போட்டோ
  • வருமானச் சான்றிதழ் 
  • ஆதார் அட்டை 
  • சாதிச் சான்றிதழ் 
  • இருப்பிடச் சான்றிதழ் 
  • தையல் பயிற்சி சான்றிதழ் 
  • ஆதரவற்றோர் / கைவிடப்பட்டோர் / விதவை / மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் 
தகுதியானவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க!

இதை நீங்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க கீழே இருக்கும் லிங்கில் சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம்..

https://www.tnesevai.tn.gov.in/

No comments:

Post a Comment