உங்ககிட்ட சாதிச் சான்றிதழ் இல்லையா ?சுயஉறுதிமொழிச் சான்றிதழ் டவுன்லோட் பண்ணனுமா! | Download self attestation certificate | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, September 29, 2023

உங்ககிட்ட சாதிச் சான்றிதழ் இல்லையா ?சுயஉறுதிமொழிச் சான்றிதழ் டவுன்லோட் பண்ணனுமா! | Download self attestation certificate | Techinfo

தொழிலாளர் நலவாரியம் அட்டை புதுப்பிதலில் உங்களுடைய சாதியை தேர்ந்தெடுக்கும் போது SC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சாதி சான்றிதழ்  Upload செய்யவேண்டும்.  உங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லையென்றால் அதற்கு பதிலாக சுய உறுதிமொழிச் சான்றிதழை நிரப்பி  Upload பண்ணலாம்.  அதை எவ்வாறு டவுன்லோட் செய்து நிரப்பலாம் என்பதை பார்ப்போம்!

  • கீழே உள்ள Download Form என்ற பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.
  • இந்த படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது மேலே உள்ள படத்தில் காட்டியவாறு உங்களுடைய முகவரி அதாவது  மாவட்டம் , தாலுகா ,வசிக்கும் கிராமம் , கதவுஎண் , தெருப் பெயர்  போன்றவற்றை நிரப்பவும் .
  • அடுத்து உங்களுடைய பெயர் , உங்களது தந்தை பெயர் , மதம் , சாதி மற்றும் சாதி உட்பிரிவையும் சரியாக எழுதி கீழே மனுதாரரின் கையொப்பம் என்னும்மிடத்தில் உங்களுடைய கையெழுத்தை இட வேண்டும் .
  • இது உறுதிமொழிச் சான்றிதழ் என்பதால் இதை நிரப்பும்போது எந்தவித தவறும் செய்யாமல் உங்களுடைய சாதியினை சரியாக எழுத வேண்டும்.அவ்வாறு தவறாக எழுதும் பட்சத்தில் எதிர்காலத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது .

Download Form

No comments:

Post a Comment