மகளிர்காக "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் பயன் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் ஒவ்வொரு குடும்ப தலைவியும் இதில் விண்ணப்பம் செய்தனர். அதில் தகுதிவாய்ந்த சுமார் 1கோடியே 60 லட்சம் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது. மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எந்த காரணத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதை ஆன்லைன் வாயிலாக நாமே பார்த்துக்கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- கீழே உள்ள " விண்ணப்பத்தின் நிலையை அறிய " என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது திரையில் தெரியக்கூடிய கட்டத்தில் அதிகாரிகள் உள்நுழைவு , பொதுமக்கள் உள்நுழைவு என இரண்டு Options இருக்கும் .
- அதில் நீங்கள் பொதுமக்கள் உள்நுழைவு என்ற Option-னை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது விண்ணப்பதாரருடைய ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
- ஆதார் எண்ணை டைப் செய்தபின் OTP அனுப்பவும் என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- விண்ணப்பதாரருடைய ஆதார் அட்டையில் லிங்க் செய்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் .
- அந்த OTP யை கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்யவும் .
- அருகில் உள்ள Captchaவை சரியாக டைப் செய்து சரிபார்க்க என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய விண்ணப்பத்தின் நிலை பற்றிய முழு விவரமும் காண்பிக்கும்.
- அதில் உங்களுடைய விண்ணப்பம் தகுதியானது என்றால் " உங்களுடைய விண்ணப்பம் தகுதியானது " என்று காண்பிக்கும்
- உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணமும் காண்பிக்கும்.
- இந்த காரணம் உங்களுக்கு போதுமானதாக இலையென்றால் நீங்கள் இ-சேவை மையம் சென்று மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment