வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Income Certificate on Mobile | TNEGA | TechInfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, September 4, 2023

வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Income Certificate on Mobile | TNEGA | TechInfo


சிறியவர்கள்  முதல் பெரியவர்கள்  வரை  வருமான சான்று தேவைபடுகிறது .குழந்தைகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கு வருமான சான்று தேவைபடுகிறது .பெரியவருக்கு அரசாங்க வேலைக்கு வருமான சான்று தேவைபடுகிறது  .அப்படிப்பட்ட வருமான சான்று  எப்படி apply பண்ணுவது தெரியவில்லையா .இப்போ ஆன்லைன் மூலம் apply பண்ணிக்கலாம் .எப்படி என்பதை கீழே பார்க்கலாம் .

வருமான சான்றுக்கு தேவையான ஆவணங்கள் 
  1. குழந்தையின் ஆதார் 
  2. குழந்தையின் போட்டோ 
  3. அப்பா ,அம்மா ஆதார் 
  4. ரேஷன்கார்டு 
வருமான சான்று விண்ணப்பிக்கும் முறை 
  • முதலில் வருமான  சான்றிதல்  விண்ணபிக்க TNEGA என்ற அதிகார பூர்வமான  இணைய தளத்திற்கு செல்ல வேண்டும் .
  • இணைய தளத்திருக்கு சென்ற பின்பு உங்களுக்கு தனியாக ஒரு Account-யை create பண்ணி அதை லாகின்  பண்ணிக்கோங்க.

  • லாகின் பண்ணதும் அதில் Revenue Department -யை கிளிக் செய்ய வேண்டும்
  • பின் அதில் INCOME -யை  SELECT பண்ண வேண்டும் .
  • select பண்ணதும் Proceed என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் 
  • யாருக்கு  வருமான சான்றிதழ் போட போறோமோ அவர்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்யவேண்டும் .
  • டைப் பண்ணதும் search என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • அதில் can number என்ற பாக்ஸை கிளிக் செய்து ,ஆதார் நம்பரை டைப் செய்து ,பிறந்ததேதி-யை டைப் செய்து ,மொபைல் நம்பர் போட்டு OTP -யை sent பண்ண வேண்டும் .
  • OTP போட்டதும்  Proceed என்ற  பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • இதை கிளிக் செய்ததும் ஒரு application form ஓபன் ஆகும் .அதை எல்லாம் ஒரு தடவ செக் பண்ணிட்டு கீழே வரவேண்டும் .
  • கீழே வந்ததும் குடும்ப உறுபினர் எண்ணிக்கை கேட்கும் .உங்க குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை  டைப் பண்ணவேண்டும் .
  • பிறகு குடும்பத்திலுள்ள அனைவரோட பெயர் பிறந்ததேதி,பாலினம், உறவுமுறை , அவர்கள் செய்யும்  வேலை  போன்றவற்றை  டைப் பண்ண வேண்டும் .
  • யாருக்கு வருமான சான்று போடுரோமோ அவங்க உறவுமுறை யில் self என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் 
  • அப்பாவுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை டைப் பண்ணவேண்டும் .பிறகு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • பிறகு போட்டோ பதிவேற்றம் செய்யவேண்டும் , பிறகு ரேஷன்கார்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .பின் குழந்தையின் ஆதார் பதிவேற்றவேண்டும் 
  • பின்னர் அப்பா ஆதாரை self ஆதார் என்று பதிவேற்றவேண்டும் .
  • மேலே download self என்று இருக்கும் .அதை டவுன்லோட் செய்யவேண்டும் . அதற்கு அடுத்து கையெழுத்து option வரும் 
  • அந்த கையெழுத்தை செட் பண்ணி  self -ஆக பதிவேற்றவேண்டும் .பின்னர் make a payment-யை கிளிக் செய்து ரூ -60 ஆன்லைனில் கட்ட வேண்டும் .
  • பணம் செலுத்தியதும் ஒப்புக்கை சீட்டு  வரும் .அதைவைத்துக் நாம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
  • ஒப்புதல் வந்தவுடன் நீங்கள் வருமான  சான்றிதழ்  பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..



No comments:

Post a Comment