
தமிழக அரசு மகளிருக்காக
"மகளிர் உரிமைத்தொகை" ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது . இந்த திட்டத்திற்கு மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது . இறுதியாக தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இ -சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் அவ்வாறு மேல்முறையீடு செய்யும் விண்ணப்பங்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி அரசு தெரிவித்த விதிகளுக்குள் உட்பட்டும் நிராகரிக்கப்பட்ட விண்ணபத்தாரர்கள் மேல்முறையீடு செய்வதற்காக நிராகரிப்பு காரணங்களின் அடிப்படையில் நான்கு விதமான படிவங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணபத்தாரர்கள் இந்த படிவங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள இ -சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.
அந்த நான்கு படிவங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுன்லோட் செய்துகொள்ளவும்.
1. குடும்பத்தில் அரசு ஓய்வூதியம் பெறுவதாக விண்ணப்பம் நிராகரிக்கபட்டிருந்தால் இந்த படிவத்தை டவுன்லோட் செய்யவும் .
2. குடும்பத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பதாக விண்ணப்பம் நிராகரிக்கபட்டிருந்தால் இந்த படிவத்தை டவுன்லோட் செய்யவும் .
3. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்துவதாக விண்ணப்பம் நிராகரிக்கபட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருப்பதாக விண்ணப்பம் நிராகரிக்கபட்டிருந்தாலோ இந்த படிவத்தை டவுன்லோட் செய்யவும் .
4. வேறு காரணத்திற்காக உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கபட்டிருந்தால் இந்த படிவத்தை டவுன்லோட் செய்யவும்
No comments:
Post a Comment