தமிழக அரசு மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்ததை தேர்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.1000 உரிமை தொகை அனைவருக்கும் கொடுத்துள்ளர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிக்கு இந்த உரிமை தொகை வரவில்லையா? அப்போ! எதற்க்காக வரவில்லை என்று நீங்கள் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எப்படி தெரியுமா?
- முதலில் நீங்கள் கீழே இருக்கும் "விண்ணப்ப நிலையை அறிய " என்ற பட்டனை கிளிக் செய்ங்க.
- இப்போ உங்களது குடும்ப அட்டை எண் கேட்கும் இதில் நீங்கள் விண்ணப்பம் செய்த குடும்ப அட்டை எண்-ஐ கொடுத்துவிட்டு பின் கீழே இருக்கும் சம்பர்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களது விண்ணப்பத்தின் முழு விவரமும் திரையில் வந்துவிடும்.
- இதில் விண்ணப்பதாரர் பெயர், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், விண்ணப்ப எண், குடும்ப அட்டை எண், குடும்ப அட்டையில் இணைத்துள்ள எண், என அணைத்து தகவலும் தெரிந்துவிடும்.
- மேலும் வகைப்பாடு என்ற இடத்தில உங்கள் விண்ணப்பம் ஏற்க்கபட்டதா? இல்லையா? என்று தெரிந்துவிடும்.
- உங்களது விண்ணப்பம் "ஏற்கப்பட்டது" என்று வந்தால் கீழேயே உங்களுக்கு எந்த வங்கியில் பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
- உங்களது விண்ணப்பம் "ஏற்கப்படவில்லை" என்று வந்தால் கீழேயே உங்களுக்கு விண்ணப்பம் எதற்க்காக ஏற்கப்படவில்லை என்ற காரணத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment